சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அழாத.. அடுத்த ஜென்மத்துல நான்தான் உன் புருஷன்".. அப்படின்னு சொல்லிட்டு செத்து போன காதலன்!

விளையாட்டில் பணம் இழந்து தற்கொலை செய்து கொண்டவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "எனக்கு என்னோட காதலிதான் உயிர்... எல்லாமே அவதான்... என்னை மன்னிச்சிரு... அடுத்த ஜென்மத்துல நானே உனக்கு புருஷனா கிடைப்பேன்... அழுகாத.. வீட்டுல உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுப்பாங்க.. என் முகத்தை என் காதலி கடைசியா பார்த்ததும், என்னை தூக்கிட்டு போங்க" என்று ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர் இப்படி ஒரு லெட்டரை எழுதி வைத்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள டாட்டூ கடையில் நித்திஷ் என்ற இளைஞர் வேலை பார்த்தார்.. அவர் ஒரு தனியார் காலேஜில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.. ஊரடங்கு என்பதால் காலேஜ் மூடப்படவும், இந்த டாட்டூ கடையில் வேலை பார்த்து வந்தார்.. அப்போது ஆன்லைன் கேம்களை நிறைய விளையாடி வந்துள்ளார்.

குறிப்பாக பப்ஜி, ரம்மி, உள்ளிட்ட காசு வைத்து விளையாடும் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் காட்டி இருக்கிறார்.. இப்படி பணம் வைத்து விளையாடி, ஏற்கனவே 20 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார்... இதைதவிர சேர்த்து வைத்திருந்த மற்ற பணத்தையும் இந்த விளையாட்டிலேயே போட்டுள்ளார்.. எல்லா காசையும் இழந்துவிட்டார்.. ஒரு கட்டத்தில் கையில் காசு இல்லாமல் போகவும், அந்த விளையாட்டை விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 college student committed suicide after losing money in online game

அதனால், வேலை பார்த்த கடையிலிருந்தே பணத்தை எடுத்து விளையாட்டில் செலவு செய்தார். இதனால் கடை ஓனர் பணத்தை கேட்டும், அதை திருப்பி தர முடியவில்லை.. இதனால் மன உளைச்சலிலேயே இருந்த அந்த இளைஞர், அதே கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்தது.. மேலும் தற்கொலைக்கு முன்பு ஒரு லெட்டர் எழுதி வைத்திருந்தார்.

ஆனால் இந்த இளைஞர் தற்கொலைக்கு முன்பு ஒரு லெட்டர் எழுதி வைத்திருந்தார்.. இவர் இறந்து 2 நாள் ஆகியும் அந்த லெட்டரின் தாக்கம் இன்னும் குறையவில்லை.. இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் போலும்.. அவருக்கும் சேர்த்து அதில் உள்ள வரிகள்தான் இவை:

"என்னோட இந்த முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை, நானேதான்.. ரொம்ப கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த என்னோட பணத்தை எல்லாம் விளையாட்டில் வைத்து தோற்றுவிட்டேன். கடையில் இருந்தும் ரூ.20,000 எடுத்து விளையாடி தோற்றுவிட்டேன். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, பைத்தியமே பிடிச்சிடுச்சு.

புதிய தேசிய கல்விக் கொள்கை...மத்திய அமைச்சரவை ஒப்புதல்... இந்தி கட்டாயமா?புதிய தேசிய கல்விக் கொள்கை...மத்திய அமைச்சரவை ஒப்புதல்... இந்தி கட்டாயமா?

நான் எடுக்கிற இந்த முடிவு தப்புதான். ஆனா எனக்கு வேற வழி தெரியல.. என்னை மன்னிச்சிடுங்க.. சேகர் அண்ணா, உங்களை கேட்காம உங்க பணத்தை எடுத்து தப்பு பண்ணிட்டேன்... அம்மா, அப்பா உங்களை எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும், மன்னிச்சிடுங்க.

எனக்கு என்னோட காதலிதான் உயிர்... எல்லாமே அவதான்... என்னை மன்னிச்சிரு... அடுத்த ஜென்மத்துல நானே உனக்கு புருஷனா கிடைப்பேன். அழுகாத.. வீட்டுல உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுப்பாங்க... என்னோட போன் பாஸ்வேர்டும் இதுதான்.

எல்லோருக்கும் தகவல் குடுங்க.. முக்கியமாக என் காதலிக்கு குடுத்துடுங்க.. கடைசியா அவ என்னை பார்த்ததும் என்னை தூக்கிட்டு போங்க... எல்லாருக்கும் ஸாரி.. என் தம்பியை நல்லா பாத்துக்கோங்க" என்று எழுதி வைத்திருக்கிறார்.

மாணவர்கள், இளைஞர்களை மெல்ல மெல்ல கொன்று வருகிறது இந்த ஆன்லைன் விளையாட்டுக்கள்.. விளையாட்டில் மூழ்கிவிடுவதால், அப்படியே மாரடைப்பு ஏற்பட்டு 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவமும் ஈரோட்டில் நடந்தது.. இதெல்லாம் அநியாய மரணங்கள்.. டிக்டாக் மாதிரி இதற்கெல்லாம் தடை விதித்தாலும் நல்லாதான் இருக்கும்!

English summary
college student committed suicide after losing money in online game
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X