சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    சத்தியமங்கலத்தில் சாலை மறியல்- பள்ளி மாணவிகள் கைது-வீடியோ

    ஈரோடு: பிளஸ் 2 முடித்தும் இன்னும் லேப்டாப் தராததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கைது செய்தனர்.

    தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் நடந்து வருகிறது .

    இதே போல் ஈரோடு நகராட்சிக்குட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் தமிழக அதிமுக முன்னாள் அமைச்சரும் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான கேவி ராமலிங்கம், ஈரோடு கிழக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு +2 பயின்ற மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினர்.

    மறியல்

    மறியல்

    முன்னதாக இதுகுறித்து தகவல் அறிந்த 2017- 18 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் படித்து முடித்த மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு இதுவரையிலும் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் கடந்த அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்காததை கண்டித்து மாணவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    தொடர்ச்சியாக சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே முன்னாள் மாணவர்களிடம் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    போக்குவரத்து பாதிப்பு

    மறியலில் ஈடுபட்ட முன்னாள் மாணவர்கள் சமரசம் ஏற்படாத நிலையில் தங்களது போராட்டத்தை தொடர்ந்ததால் சாலைகளில் செல்ல வேண்டிய வாகனங்கள் முழுமையாக இருபுறங்களிலும் அடைக்கப்பட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சம்பவம்

    சம்பவம்

    இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மாணவ மாணவிகளை அப்புறப்படுத்த பெருமளவு போலீசார் அங்கு குவிக்கப்பட்டதோடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாததன் காரணமாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாணவ மாணவிகளை போலீசார் தடியடி நடத்தி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடுமை காட்டிய போலீஸார்

    கடுமை காட்டிய போலீஸார்

    தடியடி நடத்தி கைது செய்யப்பட்ட மாணவ மாணவியர்களை போலீஸார் கைது செய்து காவல் நிலையங்களுக்கு இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளையும் பெண் போலீஸார் சற்று கடுமையாகவே கையாண்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    College students protest against TN government in Satyamangalam demanding Laptops.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X