சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

9 மணிக்குள் வேலைக்கு திரும்பா விட்டால்.. அரசு கெடு.. ஆசிரியர்கள் முடிவு என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆசிரியர்கள் போராட்டம்- வீடியோ

    சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தகவலை தெரிவித்துவிட்டு உடனடியாக தங்கள் பணியிடத்தில் சேர்ந்து பணியை தொடரலாம் என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    நேரிலோ, குறுந்தகவல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக தகவலை தெரிவிக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

    இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இந்த ஜாக்டோ ஜியோ தற்போது முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது.

    ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து நடந்து வரும் இந்த போராட்டம் தற்போது பெரிதாகி உள்ளது.

    பேச்சுவார்த்தை இல்லை

    பேச்சுவார்த்தை இல்லை

    அரசு இவர்களின் போராட்டத்திற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை. இது தொடர்பாக முறையான பேச்சுவார்த்தையும் இன்னும் நடக்கவில்லை. இதனால்தான் ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். 6 நாட்களாக போராட்டம் நடக்கிறது.

    போராட்டம் தொடரும்

    போராட்டம் தொடரும்

    தொடரும் என்று கூறுகிறார்கள் இதனால் பல பள்ளிகளில் பாடம் நடத்துவது பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு இன்னும் ஏற்கவில்லை. இதனால் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

    ஆசிரியர்கள் கைது

    ஆசிரியர்கள் கைது

    இதற்கிடையே, பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்றிரவு, தருமபுரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

    கெடு முடிகிறது

    கெடு முடிகிறது

    இந்த போராட்டம் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்கு பணிக்கு திரும்ப வேண்டும். இன்று பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை ஏதும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. இன்று வரவில்லை என்றால் அவர்களின் இடம் காலியிடமாக கருதப்படும் என்று கூறியுள்ளார்.

    பணியிடங்கள் நிரப்பப்படும்

    பணியிடங்கள் நிரப்பப்படும்

    ஆசிரியர்கள் பணிக்கு வராவிட்டால் அவர்களிடம் இடம் காலிப்பணி இடங்களாக கருதப்படும். காலிப்பணி இடத்தை தற்காலிக ஆசிரியர்கள் மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களுக்கு பதிலாக 7,500 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் புதிய ஆசிரியர்கள் இன்றில் இருந்து நியமிக்கப்பட உள்ளனர்.

    English summary
    Teachers can continue their work by 9 am Government warning
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X