சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வால் நட்சத்திரம் பார்க்க 6,800 ஆண்டுகள் காத்திருக்கணும்...மிஸ் பண்ணாதீங்க!!

Google Oneindia Tamil News

சென்னை: வானில் தற்போது தெரியும் வால் நட்சத்திரத்தைப் பாருங்கள். இல்லையென்றால் அடுத்த 6,800 ஆண்டுகளுக்கு பார்க்க முடியாது என்று நாசா தெரிவித்துள்ளது. தொடர்ந்து 20 நாட்களுக்கு இந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணில் காணலாம். இந்த வால் நட்சத்திரக்கு சி/2020 எஃப் 3 நியோவிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

வானில் வடமேற்குப் பகுதியில் சூரியன் அஸ்தமனம் ஆன பின்னர் இந்த வால் நட்சத்திரம் தெரியும். இந்த வால் நட்சத்திரம் கடந்த ஜூலை 3 ஆம் தேதியில் இருந்து பூமிக்கு அருகே வரும் என்று நாசா தெரிவித்து இருந்தது. நாசாவின் விண்வெளி டெலஸ்கோப் இந்த வால் நட்சத்திரம் பூமிக்கு அருகில் வருவதை கண்டறிந்து இருந்தது. அகப்பை வடிவில் இருக்கும் நட்சத்திரக்கு அருகே இந்த வால் நட்சத்திரம் காணப்படும்.

வாட்ஸ் அப் மூலம் ரூ. 47 ஆயிரம் கோடிக்கு தீவு வாங்கிய ஐரோப்பியர்!!வாட்ஸ் அப் மூலம் ரூ. 47 ஆயிரம் கோடிக்கு தீவு வாங்கிய ஐரோப்பியர்!!

Comet NEOWISE will appear hereafter 6,800 years, dont miss to watch in the evening

வெறும் கண்ணில் பார்க்கும்போது உங்களுக்கு அருகில் எங்கும் விளக்கு எரியக் கூடாது. சூரியன் அஸ்தமனம் ஆன பின்னர் 45 நிமிடங்கள் காத்திருந்து இந்த வால் நட்சத்திரத்தைக் காண வேண்டும். வெறும் கண்ணில் பார்க்கும்போது தெளிவாக தெரியாது. டெலஸ்கோப்பில் பார்க்கும்போது வால் உருவத்தில் நன்றாக தெரியும்.

Comet NEOWISE will appear hereafter 6,800 years, dont miss to watch in the evening

இந்த வால் நட்சத்திரம் பாதி தான் நீராலும், பாதி தூசுனாலும் ஆனது. 13 மில்லியன் ஒலிம்பிக் நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர் அளவிற்கு இதிலும் தண்ணீர் இருக்கும். பூமியில் இருந்து 70 மில்லியன் மைல் தொலைவில் இருக்கிறது. ஒரு வினாடிக்கு 40 மைல் தூரத்திற்கு பயணிக்கும். இந்த நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Comet NEOWISE will appear hereafter 6,800 years, dont miss to watch in the evening
English summary
Comet NEOWISE will appear hereafter 6,800 years, don't miss to watch in the evening
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X