சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காத்திருக்க வேண்டாம்.. சென்னையில் மின்மயானங்களில் விரைவில்ஆன்லைன் பதிவு முறை.. ககன் தீப் சிங் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: உடல்களை தகனம் செய்ய காத்திருப்பதை தவிர்க்க மின்மயானங்களில் விரைவில் ஆன்லைன் பதிவு முறை கொண்டுவரப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று பாதித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு உதவுவதற்காக சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி ஆலோசனை கட்டுப்பாட்டு மையத்தில் பயிற்சி மருத்துவர்கள் தொலைபேசியில் அழைத்து ஆலோசனைகள் வழங்கி மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார்.

ஆக்ஸிஜன் படுக்கைக்கு இனி தட்டுப்பாடு இருக்காது வந்த ஒரே வாரத்தில் தீயாய் வேலை செய்யும் ககன்தீப் சிங்ஆக்ஸிஜன் படுக்கைக்கு இனி தட்டுப்பாடு இருக்காது வந்த ஒரே வாரத்தில் தீயாய் வேலை செய்யும் ககன்தீப் சிங்

மாநகராட்சி ஆணையர்

மாநகராட்சி ஆணையர்

பின்னர் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் பேசுகையில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களை கண்காணிக்கும் வகையில் 300 மருத்துவர்கள் சென்னை மாநகராட்சி சார்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மருத்துவர்கள் ஆலோசனை

மருத்துவர்கள் ஆலோசனை

மருத்துவர்கள் வீட்டு சிகிச்சையில் உள்ளவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குகி வருகிறார்ள் அப்போது வீட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் உடலின் வெப்பநிலை சரியாக உள்ளதா? காய்ச்சல் உள்ளதா? ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது என்று மருத்துவர்களிடம் கூற வேண்டும். அதன்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

மாலையில் உடல்கள்

மாலையில் உடல்கள்

சென்னையில் மின்மயானங்கள் 140க்கும் மேல் உள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். இதில் காலையில் குறைவான எண்ணிக்கையில் தான் இறந்தவர்களின் உடல்கள் வருகிறது. மாலையில் அகமாக வருகிறது. மாலை 6 மணி வரை தான் வேலை நேரம். ஆனால் இரவு வரை தகனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் 24 மணி நேரம் மின்மயானத்தில் தகனம் செய்யக் கூடாது. அதை சுத்தம் செய்ய வேண்டும், இல்லையென்றால் இயந்திரம் பழுதாகி விடும்.

விரைவில் நடைமுறை

விரைவில் நடைமுறை

சென்னையில் உள்ள மின்மயானத்தில் எங்கு காலியாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணியில் ஐடி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் ஆன்லைன் பதிவு முறை நடைமுறைக்கு வரும்.

ஈஞ்சம்பாக்கத்தில் தயார்

ஈஞ்சம்பாக்கத்தில் தயார்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 69 பேர் ஆக்சிஜன் படுக்கைகளில் உள்ளனர். நேரடியாக நோயாளிகளை அனுமதிக்கப்படுவதில்லை. ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைப்படுகிறவர்கள் அங்கு உள்ளனர். தண்டையார் பேட்டையில் 30 க்கும் மேற்ப்பட்ட நபர்கள் உள்ளனர். ஈஞ்சம்பாக்கத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளது. இவை இரண்டு, மூன்று நாட்களில் திறக்கப்படும்" என்றார்.

English summary
Chennai Corporation Commissioner Gagandeep Singh Bedi said the online registration system will soon be introduced to avoid waiting for bodies to be cremated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X