சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலநிலை மாற்றத்தால் .. சென்னையில் 2015ம் ஆண்டை விட மிகப் பெரிய வெள்ளம் வரலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஐஐடி (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், கார்பன் வாயு வெளியேற்றம் அதிகரிப்பது , வரும் ஆண்டுகளில் சென்னையில் 2015ம் ஆண்டு பெய்ததை விட மிகத் தீவிரமான மழைக்கு வழிவகுக்கும் என்று தெரிய வந்துள்ளது.

சென்னையில் கடந்த 100 ஆண்டு சரித்தில் இருந்து பெய்யாத ஒரு மழையையும், வெள்ளத்தையும் 2015ம் ஆண்டு மிகப்பெரிய கனமழை பெய்தது. அந்த மழையால் சென்னையில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் மரணம் அடைந்தனர். பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர். சுமார் ஒரு மாதத்திற்கு பிறகே சென்னை இயல்பு நிலைக்கு வந்தது.

இந்நிலையில் சென்னை ஐஐடி (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள். சென்னையில் 2015 வெள்ளத்தில் காலநிலை மாற்றத்தின் விளைவைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு வானிலை ஆராய்ச்சி மற்றும் முன்கணிப்பு மாதிரியைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.

குட் நியூஸ்... கொரோனாவிலிருந்து ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ்.. டெஸ்ட்டுகளும் கிடுகிடு உயர்வு..!குட் நியூஸ்... கொரோனாவிலிருந்து ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ்.. டெஸ்ட்டுகளும் கிடுகிடு உயர்வு..!

 கடலோர நகரங்களில்

கடலோர நகரங்களில்

சென்னை, மும்பை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், உள்ளிட்ட கடலோர நகரங்களில் பருவ நிலை மாற்றம் ஏறபடுத்தும் தாக்கம் மற்றும் அதில் இருந்து மீள்வதற்காக SPLICE- காலநிலை மாற்ற திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் ‘கடலோர உள்கட்டமைப்பு மற்றும் காலநிலை உள்கட்டமைப்பு மீதான தழுவல் உத்திகள்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு ஜூன் 25 அன்று வெளியிடப்பட்டன.

அதிக வெப்பநிலை

அதிக வெப்பநிலை

இந்த ஆய்வில் அதிகப்படியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்ற காரணிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது, இதனால் வளிமண்டலத்தில் உறுதியற்ற தன்மை ஏற்படுவதுடன் தீவிர மழைப்பொழிவு அதிகரிக்கும்.

2015விட அதிகமாகும்

2015விட அதிகமாகும்

சென்னையில் டிசம்பர் 1, 2005 அன்று மழைப்பொழிவு தான் இதுவரை இல்லாத ஒரு மழைப்பொழிவு ஆகும். இதை ஒப்பிடும்போது எதிர்காலத்தில் இதை விட 17.37 சதவீதம் மழை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று நாட்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யும் பிராந்தியத்தின் புவியியல் பரப்பளவு எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது-

பேரழிவுக்கு வழிவகுக்கும்

பேரழிவுக்கு வழிவகுக்கும்

பசுமை இல்லாத வாயு ( கார்பன்) பயன்பாடு காரணமாக சென்னையில் "கனமழை பெய்யும் அளவு மற்றும் கனமழையின் தீவிரம் எதிர்காலத்தில் கணிசமாக அதிகரிக்கும். எதிர்காலத்தில் சென்னையில் முன்பு ஏற்பட்டது போன்ற நிகழ்வு ஏற்பட்டால், வெள்ளம் பல நாட்கள் தொடர வாய்ப்புள்ளது. பசுமை இல்லாத வாயு பயன்பாடு அதிகரிப்பது எதிர்காலத்தில் பேரழிவை எதிர்கொள்ளவதற்கான சூழலை உருவாக்கும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

English summary
climate change : rise in carbon emission may lead to extreme rainfall in Chennai bigger floods than 2015
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X