சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் 152 கட்டிடங்கள் மக்கள் வசிக்க தகுதியில்லாதவை.. ஆணையர் பிரகாஷ் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகராட்சியில் 152 கட்டிடங்கள் மக்கள் வசிக்க தகுதியற்றவை என்றும் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

Recommended Video

    சென்னையில் 152 கட்டிடங்கள் மக்கள் வசிக்க தகுதியில்லாதவை.. ஆணையர் பிரகாஷ் பேட்டி - வீடியோ

    சென்னையில் நிவர் புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இதில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    புயலால் சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    மழை

    மழை

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையில் சென்னைக்கு 80 செமீ மழை கிடைக்கும். கடந்த 36 மணி நேர காலகட்டத்தில் மட்டும் சென்னையில் 23 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளது. புயல் மீட்பு பணியாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டன.இதன் மூலம் பணிகள் வேகப்படுத்தப்பட்டன.

    புகார்கள்

    புகார்கள்

    1913 என்ற அவசர எண் அறிவிக்கப்பட்டது. அனைத்து மண்டல அலுவலக எண்கள் மூலமும் 58 நீர் தேக்கம் குறித்த புகார்கள் உட்பட 302 புகார்கள் பொதுமக்களிடமிருந்து வந்தன. அதில் நேற்று காலை வரை 132 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 170 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேளச்சேரி, ராம் நகர், புளியந்தோப்பு போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இயற்கையாக அமைந்த நில அமைப்பின் காரணமாக நீர் வடியாமல் தேங்கியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதிகளில் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இயல்பு நிலை

    இயல்பு நிலை

    சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பி விட்டது. சென்னையில் உள்ள 210 நீர் நிலைகள் அனைத்தும் புனரமைத்து நீர் மேலாண்மைக்கு பயன்படுத்த திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. , அடையாளம் காணப்படாமல் உள்ள நீர் நிலைகளையும் இனி வரும் காலங்களில் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    சென்னை

    சென்னை

    சென்னையில் 152 கட்டிடங்கள் பொதுமக்கள் வசிக்க தகுதியில்லாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும். உரிய கால அவகாசம் அளித்து அதன் பின்பும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் நீதிமன்ற உத்தரவின்படி மேற்கண்ட கட்டிடங்களை இடிக்க முடிவெடுக்கப்படும் என்றார்.

    English summary
    Commissioner Prakஎash said 152 buildings in Chennai were unfit for human habitation and action would be taken as per the court order.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X