• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..!

|

கம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..!

உன் வயசு பையன்தானே அவன்.. அவனைப் பார்த்தியா கை நிறைய சம்பாதிக்கிறான், நீ இன்னும் சரியா ஒரு வேலையில உட்கார முடியாம சுத்திகிட்டே இருக்கே. உன் வயசு தானே அவளுக்கு.. அவளைப் பார்த்தியா அழகா கல்யாணம் பண்ணிகிட்டு, குடும்பம் நடத்துறா என நம்மை அடுத்தவருடன் ஒப்பிட்டே உயிரை வாங்கும் உறவுகள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

நம்ம வீட்டுலயே இரண்டு பசங்க இருந்தா, ஒருத்தரை இன்னொருத்தருடன் ஒப்பிடாதீர்கள் என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் நம்மால் ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடாமல் இருக்கவே முடியாது என்பதுதான் உண்மை. ஏன்னா, நம்ம மனசும், மூளையும் இப்படி செயல்படத்தான் பழக்கப்பட்டிருக்குதாம். சரி, ஒப்பிடாம இருக்க முடியாதுன்னா, அந்த ஒப்பீட்டை எப்படி நமக்கு சாதகமா பயன்படுத்துறது. இதையே வெற்றிக்கான மந்திர சாவியா மாத்துறது எப்படி? இதைத்தான் இப்போ நாம பார்க்கப் போறோம்.

comparison is good and well

உங்களுக்கு என்ன பொருள், என்ன தரத்தில், என்ன விலையில் வேண்டும் என்று கேட்டால், நம்ம ஆளுங்க பே.. பே.. என்று முழிப்பார்களாம். அதேசமயம் இரண்டு, மூன்று பொருட்களை காண்பித்தால், அவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு பார்த்து ஒன்றை தேர்ந்தெடுப்பார்களாம். இந்த கம்ப்பேரிசன் கலையை நன்றாக கற்று வைத்திருக்கும் வியாபாரிகள் கோடிகளை குவிக்கிறார்கள். உதாரணத்திற்கு, பிரபல ஆங்கில இதழ் ஒன்றில் ஆண்டு சந்தா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது, ஆண்டு சந்தா பெற மூன்று விலைப் பட்டியல்களை கொடுத்திருக்கிறார்கள்.

1. இதழை இணையதளத்தில் மட்டும் படிக்க - 59$

2. இதழை அச்சு பதிப்பாக மட்டும் படிக்க - 125$

3. அச்சு மற்றும் இணையதளத்தில் படிக்க - 125$

ஒரு உளவியல் ஆய்வாளர், இந்த அறிவிப்பை அமெரிக்காவின் புகழ்பெற்ற MIT கல்வி நிலையத்தில் படிக்கும் 100 மாணவர்களிடம் கொடுத்து, மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய சொல்லி இருக்கிறார். இதில் 16 பேர் முதல் விலையையும், 84 பேர் மூன்றாவது விலையையும் தேர்வு செய்திருக்கிறார்கள். இரண்டாவது விலையை யாரும் சீண்டவில்லை.

அடுத்ததாக இந்த அறிவிப்பில் இரண்டாவது ஆப்ஷனை நீக்கிவிட்டு, மறுபடியும் மற்றொரு 100 மாணவர்களிடம் இதே ஆய்வை நடத்தியிருக்கிறார். இந்த முறை, 68 பேர் முதல் ஆப்ஷனை தேர்வு செய்திருக்கிறார்கள். வெறும் 32 பேர் மட்டும் 125$ செலவு செய்து அச்சு மற்றும் இணைய சந்தாவை தேர்வு செய்திருக்கிறார்கள். இந்த ஆய்வு மூலம் அவர் என்ன சொல்றாருன்னா, நிறைய பேரை விலை அதிகமான ஆப்ஷனை தேர்வு செய்ய வைக்கணும்னா, சும்மா உல்லல்லாங்கிட்டிக்கும் இரண்டாவதா ஒரு டம்மி ஆப்ஷன் தேவைப்படுதாம். அப்பதான் நம்ம ஆளுங்க, அடடே அச்சு, இணையதளம் இரண்டும் சேர்த்து 125$, அதேசமயம் வெறும் அச்சில் மட்டும் படிக்கவும் அதே 125$.. அப்படின்னா இரண்டையும் செலக்ட் பண்ணா எவ்வளவு பணம் மிச்சம், சூப்பர் ஆஃபர் என்று நினைக்கிறார்களாம். ஆனால் இரண்டே ஆப்ஷன்கள் மட்டும் கொடுத்தால் வெறும் பணத்தை ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு பார்த்து விலை குறைவான ஆப்ஷனுக்கு தாவிவிடுவார்களாம்.

சரிங்க, இந்த கம்ப்பேரிசன் விஷயத்தை நாங்க எப்படி சாதகமா பயன்படுத்த முடியும் என்று கேட்கிறீர்களா? இதை சரியாக புரிந்துகொண்டால், முடியும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். ஒரு அலுவலகத்தில் நல்ல ஊதியத்தில், நல்ல பதவியில் இருக்கிற ஒருத்தர், அவருடைய சக பணியாளரின் சம்பளம் தெரியாத வரைக்கும் தான் நிம்மதியாக இருக்கிறாராம். இவரை விட அவர் கொஞ்சூண்டு கூட வாங்கிட்டா கூட நம்மாளுக்கு நிம்மதி நிரந்தரமா டாட்டா காட்டிட்டு போயிடுதாம். ஒரு ஆபிசில் எல்லாருக்கும் எல்லாருடைய சம்பளமும் தெரிய வந்துட்டா, அப்புறம் அந்த இடம் ரணகளமாகிவிடும் என அடித்து சொல்கிறார்கள். ஆனால் உண்மையில், சம்பளத்திற்கும், மனமகிழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுதான் பல ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்காம்.

இன்னும் சொல்லப் போனால், சம்பளம் அதிகரிக்க, அதிகரிக்க, நிம்மதி குறையுதாம். பணக்காரர்கள் பெரும்பணக்காரர்களைப் பார்த்து பொறாமையில் வெம்புகிறார்களாம். பெரும் பணக்காரர்கள் அவர்களை விடப் பணம் படைத்தவர்களைப் பார்த்து ஆதங்கப்படுகிறார்களாம். இது இப்படியே போய்க்கிட்டே இருக்குமாம்.

சரி, நாம இப்போ என்ன பண்ணனும்?

உங்க வளர்ச்சிக்கு உதவுகிற மாதிரி உங்க எண்ணத்தை மாத்துங்கன்னு சொல்றாங்க. உதாரணத்திற்கு நீங்க ஒரு கடைக்கு போறீங்க. அங்கே அழகான ஒரு பேனா இருக்கு, அதன் விலை ரூ. 25. அதை வாங்கலாம்னு நினைக்கும் போது, பக்கத்தில ஒருத்தர் வந்து இதே பேனா இன்னும் இருபது கடை தள்ளிப்போனா ரூ.18க்கு கிடைக்குது, ரூ.7 மிச்சம் என்று சொல்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள் என்று நிறைய பேர்கிட்ட கேட்டிருக்காங்க. அதில் பெரும்பாலான ஆட்கள் நான் அந்த ரூ.18 பேனா கடைக்கு போய் வாங்கிப்பேன் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள். இப்போ, இன்னொரு உதாரணம், நீங்கள் பிராண்டட் சட்டை வாங்க கடைக்கு போகிறீர்கள். உங்களுக்கு பிடித்தமான சட்டை ரூ. 455 இருக்கிறது. அதை வாங்க நினைக்கும்போது, முன்னாடி சொன்ன நம்மாளு வந்து, இதே சட்டை இன்னும் இருபது கடை தள்ளிப்போனா ரூ. 448க்கு கிடைக்குது, ரூ.7 மிச்சம் என்கிறார். இப்போ நீங்க என்ன செய்வீங்கன்னு கேட்டிருக்காங்க. ஆனா இந்த முறை நிறைய பேர் ரூ.7 மிச்சம் பிடிக்க இருபது கடை நடக்கத் தயாராக இல்லை. ஏன்னா 25 ரூபாயில் ரூ.7 மிச்சம் என்பது பெரிதாக தெரிந்தது. ஆனா ரூ. 455 செலவு பண்ணும்போது, ரூ.7 பெருசா தெரியலை. ஆனா எப்படி பார்த்தாலும் அந்த 7 ரூபாயின் மதிப்பு அதேதானே.. இதைதான் நாம புரிஞ்சிக்கணும்னு. இது புரியாததுனாலதான் பெரிய ஓட்டலில் ரூ.100 ரூபாய் டிப்ஸ் வைக்கும் நாம், வீட்டுக்கு வந்து கீரை விற்கும் பாட்டியிடம் ரூ.10க்கு மல்லுகட்டிக் கொண்டிருக்கிறோம்.

இந்த விழா காலத்தில் எங்க பார்த்தாலும் ஆஃபர் மழைதான். இனிமேல் அந்த ஆஃபர்களை இன்னொரு ஆஃபருடன் கம்ப்பேர் செய்து பார்ப்பதை விட்டுவிட்டு, நம்முடைய தேவை, சம்பளம், செலவு ஆகியவற்றுடன் கம்ப்பேர் பண்ணி பார்த்து வாங்குங்கன்னு சொல்றாங்க. கார் வாங்குறதுன்னு முடிவு பண்ணிட்டா, எந்த கார் கம்பெனி அதிக ஆஃபர் கொடுக்குதுன்னு பார்க்கிறதை விட்டுட்டு, நம்ம பட்ஜெட்டில், நம்ம தேவைக்கு ஏற்ப என்ன கார் இருக்குதுன்னு பார்க்கணும். அப்புறம் அதே மாதிரி வசதிகளோடு கிடைக்கும் மற்ற கார்களுடன் ஒப்பிட்டு, முடிவுக்கு வரணும். இந்த முறையை எல்லா விஷயங்களிலும் கடைபிடித்தால், கம்ப்பேரிசன் மாதிரி ஒரு நண்பன் நமக்கு கிடைக்க மாட்டான்.

நம்ம உளவியலை புரிஞ்சுகிட்டுதான், ரெண்டு வாங்கினா ஒன்னு இலவசம், ரூ10000க்கு பொருள் வாங்கினா ரூ.200 கிஃப்ட் கார்டு என்று மார்க்கெட்டில் சலுகைகளாக நிரம்பி வழியுது. பெரும் முதலாளிகளின் லாபத்துக்காக இந்த மாதிரி அற்புதமான ஆஃபர்களை வடிவமைச்சு கொடுக்க பெரிய டீமே இயங்கும். ஆனா டிடிஎஸ், ஜிஎஸ்டி, இன்கம் டாக்ஸ் எல்லாம் போக நம்ம சம்பளத்துல மிஞ்சுற கொஞ்சூண்டு காசை வீணாக்காம சரியா செலவழிக்க நாம தான் நமக்காக சிந்திக்கணும்.

- கௌதம்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Comparison is always good and nice, say experts.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more