• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

’பொன்னியின் செல்வன்’ பொய் சொல்லிட்டாங்க! மணிரத்னத்துக்கு வந்த சிக்கல்! வந்தியத்தேவனால் பறந்த புகார்!

Google Oneindia Tamil News

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மைக்கு புறம்பாகவும் வரலாற்றைத் திரித்தும் திரைப்படத்தில் கூறியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் வாசகர்களிடையே மிகவும் பிரபலமான அமரர் கல்கி எழுதிய கற்பனை கலந்த வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன். ஐந்து பாகங்களாக சுமார் 4000 பக்கங்களுக்கு மேல் வெளிவந்த இந்த நாவல் தமிழ் வாசகர்கள் இடையே இன்று வரை மிகவும் பிரபலமாக உள்ளது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என பலரும் முயன்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இந்த படத்தை படமாக்க வேண்டும் என ஆர்வம் காட்டினார். ஆனால் பல காரணங்களால் அப்போது அது முடியாமல் போனது.

ஆர்எஸ்எஸ் பேரணி...தமிழகத்தில் நவ.6 ல் நடத்த சென்னை ஹைகோர்ட் அனுமதி..மறுத்தால் நீதிமன்ற அவமதிப்புஆர்எஸ்எஸ் பேரணி...தமிழகத்தில் நவ.6 ல் நடத்த சென்னை ஹைகோர்ட் அனுமதி..மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

இந்நிலையில் இந்திய திரையுலகில் பிரபலமான இயக்குனரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்துள்ளார். நீண்ட முயற்சிகளுக்கு பிறகு இந்த படம் வெளிவந்துள்ளது.படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இயக்குனர் மணிரத்னம்

இயக்குனர் மணிரத்னம்

குறிப்பாக படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை பெரும் பலம் சேர்த்திருப்பதாகவும் படம் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இயக்குனர் மணிரத்னத்தின் கடந்த சில படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறாத நிலையில் நாயகன் தளபதி படங்களுக்கு கிடைத்த வரவேற்பு பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்திருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில் இயக்குனர் மணிரத்னத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் ஒரு புகார் கிளம்பி இருக்கிறது.

வந்தியத்தேவன்

வந்தியத்தேவன்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் படத்தை இயக்கிய மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸ்சாண்டர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில்,"பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்றை பொய்மைப்படுத்தியும், திரித்துக் கூறி படமெடுக்கப்பட்டுள்ளது.

பரபர புகார்

பரபர புகார்

சோழப் பேரரசரான ராஜராஜ சோழனின் படைத் தளபதியும் சோழப் பேரரச வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் வந்தியத்தேவன் குறித்து உண்மைக்குப் புறம்பாகத் திரைப்படத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெண்கள் பின்னால் திரியும் ஒரு காதல் மன்னன் போலப் பொய்யாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. சோழ பேரரசில் முக்கிய அங்கம் வகித்த வந்தியத்தேவன் குறித்து தவறாகச் சித்தரித்து மக்கள் மத்தியில் தவறான எண்ண அலைகளைப் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மணிரத்னம் கொண்டு சேர்த்திருக்கிறார்.

நடவடிக்கை வேண்டும்

நடவடிக்கை வேண்டும்

மேலும், மாமன்னர் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் சோழப்பேரரசன் உண்மையான வரலாற்றை மறைத்துத் தவறிழைத்துள்ளதாகவும், இதனால் இத்திரைப்படத்தின் இயக்குநரான மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸ்சாண்டர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் திரையுலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

English summary
The incident which has caused a stir has been reported that Vandiyathevan's character has been wrongly portrayed in the movie 'Ponniyin Selvan' which has been released under the direction of famous director Mani Ratnam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X