சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்ச்சைப் பேச்சு.. மநீம அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள்..கமல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சர்ச்சைப் பேச்சு.. கமல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

    சென்னை: கமல்ஹாசனின் சர்ச்சைப் பேச்சைதொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றார்.

    Complaint against Kamal hassan in Election commission

    கமலின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது. கமலின் பேச்சு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் கமல்ஹாசனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா மனு அளித்துள்ளார். அதில் தேர்தல் விதிமுறைகளை மீறி பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அமமுகவை இந்த விஷயத்தில் மட்டும் அதிமுக, திமுக அடிச்சுக்க முடியாது.. அடிச்சுக்கவே முடியாது! அமமுகவை இந்த விஷயத்தில் மட்டும் அதிமுக, திமுக அடிச்சுக்க முடியாது.. அடிச்சுக்கவே முடியாது!

    மேலும் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய குறைந்தது 5 நாட்கள் தடை விதிக்க வேண்டும். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Complaint against Kamal hassan in Election commission.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X