சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீரர்களே.. குண்டுகளை உங்கள் மீது போட்டுக் கொள்ளாதீர்கள்.. இவர்கள் மீது போடுங்கள்.. குமுறும் மக்கள்

பாலகோட் தாக்குதல்.. எடியூரப்பாவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

Google Oneindia Tamil News

Recommended Video

    எடியூரப்பாவின் சர்ச்சை: குவியும் கண்டனங்கள்- வீடியோ

    சென்னை: "இரு நாட்டு வீரர்களே.. தயவு செய்து குண்டுகளை மக்கள் மீதும் உங்கள் மீதும் போட்டுக்கொள்ளாமல்...இந்த மாதிரி அரசியல்வாதிகள் மீது போடுங்கள்" என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

    புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்துவிட்டனர். இது சம்பந்தமான எதிர்தாக்குதலை இந்தியா நடத்த, அதற்கு பதிலுக்கு இந்திய எல்லையில் பாகிஸ்தான் களமிறங்க, நேற்று இரு நாடுகளுக்கும் போர் மூளும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

    இதனால் உலக நாடுகளே பதற்றத்தில் இரு நாடுகளையும் உற்றுநோக்கி வருகின்றன. இதில் நம்ம நாட்டு விமானியை பாகிஸ்தான் கடத்தி கொண்டு போய் வைத்து என்ன செய்கிறதோ என்ற பீதியும் ஒருபக்கம் எழுகிறது.

    [Read more: சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரசியலாக்கும் பாஜக.. 22 எம்.பி சீட் கிடைக்கும் என்கிறார் எடியூரப்பா!]

    எடியூரப்பா பேட்டி

    எடியூரப்பா பேட்டி

    ஆனால் இறந்துபோன 40 வீரர்களை மறந்துவிட்டு, போர் நடக்கபோற அபாயத்தை நினைப்பதை விட்டுவிட்டு, மாயமான பைலட் பத்தியும் கவலைப்படாமல் பாஜகவினர் இதனை அரசியலாக்கி வருகின்றனர். இதன் உச்சக்கட்ட பேச்சுதான் எடியூரப்பா பேசியது. பாலகோட் தாக்குதலால் கர்நாடகாவில் 22 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று சொல்லி இருக்கிறார். மொத்தம் அங்க இருக்கிறதே 28 தொகுதிகள். எதற்காக எடியூரப்பதா மிச்சம் 6 தொகுதிகளை விட்டு விட்டார் என்று தெரியவில்லை.

    மோசமானவர்கள்

    மோசமானவர்கள்

    ஏற்கனவே ஆத்திரத்திலும், என்ன நடக்குமோ என்ற அச்சத்திலும் உள்ள பொதுமக்கள், எடியூரப்பாவின் இந்த அப்பட்டமான பேச்சினால் மேலும் உஷ்ணமாகி உள்ளனர். இது சம்பந்தமான ட்வீட்களையும் போட்டு எடியூரப்பாவை உண்டு இல்லை என்று திணடிறத்து வருகின்றனர்.

    பக்தர்களின் வேலை

    "நாட்டு மக்களுக்குப் போர்வெறி ஊட்டி அதன்மூலம் வாக்கு வேட்டையாடி தேர்தல் வெற்றியை ருசிப்பதுதான் இந்தத் திடீர் தேசப் பக்தர்களின் வேலை.! மக்களே உஷார்.!" என்கிறது ஒரு ட்வீட்

    மறுதேர்தல்

    கர்நாடக மாநிலத்தில் 22 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
    கட்சி தலைவர்கள் தங்கள் மறுதேர்தல் திட்டங்களைப் பற்றி யோசித்து, நாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று மற்றொரு ட்வீட் சொல்கிறது.

    தேச பற்று

    "பாகிஸ்தானில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு பின் கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் 22 தொகுதியில் வெற்றி பெறும் என்று எடியூரப்பா சொல்கிறார். இது தான் இவர்களின் தேச பற்று" என்று ட்வீட் செய்கிறார் ஒருவர்.

    அதான் சார் கடவுள்

    "தேர்தலில் வெற்றி பெறத்தான் தாக்குதலை நடத்தினோம் என்று இப்படி வெளிப்படையாக சொல்லும் மனசு இருக்கே அது தான் சார் கடவுள்" என்கிறார் மற்றொருவர்.

    குண்டு போடுங்கள்

    "தயவுசெய்து இரு நாட்டு இராணுவ வீரர்களே குண்டுகளை மக்கள் மீதும் உங்கள் மீதும் போட்டுக்கொள்ளாமல்...இந்த மாதிரி இரண்டு அரசியல் வாதிகள் மீது போடுங்கள்..." என்று மற்றொருவர் எக்கச்சக்கமான கோபத்தில் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Condemns have been raised for Yeddyurappa's Air Strike speech
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X