சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குவியும் பிற கட்சியினர்.. திமுகவுக்குள் வெடித்து கிளம்பும் பூசல்கள்.. அதிகரிக்கும் முணுமுணுப்பு

திமுகவில் உட்கட்சி பூசல் தலைதூக்கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன

Google Oneindia Tamil News

Recommended Video

    DMK Party : குவியும் பிற கட்சியினர்..அதிகரிக்கும் முணுமுணுப்பு- வீடியோ

    சென்னை: தொடர் தோல்வி, அதிருப்தி காரணமாக தேமுதிக, அமமுக என பல்வேறு கட்சிகளை சேர்ந்தோர் இணைந்து வருகிறார்கள். இதனால் திமுகவுக்கு ஒரு "மாஸ் " ஏற்பட்டு வருகிறது என்றாலும், லோக்கல் பாலிடிக்ஸ் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறதாம்!

    திமுகவில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக செந்தில் பாலாஜி எப்போது கட்சிக்குள் நுழைந்தாரோ அப்போதே ஏறுமுகம்தான்!

    அதற்கேற்றவாறு நடந்து முடிந்த தேர்தல் முடிவால் விஜயகாந்த், டிடிவி தினகரன் போன்றோர் கடுமையான அப்செட்டில் இருந்தாலும், அங்கிருக்கும் முக்கிய நிர்வாகிகள் திமுகவுக்குள் நுழைந்து வருகிறார்கள்.

    அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் வேலூர் ஞானசேகரன்!.. அடுத்தடுத்து உருண்டோடும் தலைகள்!அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் வேலூர் ஞானசேகரன்!.. அடுத்தடுத்து உருண்டோடும் தலைகள்!

    முக்கியத்துவம்

    முக்கியத்துவம்

    இது ஒரு பக்கம் பிளஸ் என்றாலும், இவர்களின் வருகையாலும், இவர்களுக்கு அளிக்கப்படும், அல்லது அளிக்கப்பட உள்ள முக்கியத்துவத்தாலும் திமுகவின் சீனியர்கள் வாய்ஸ் எடுபடாமல் உள்ளது. இதனால் உரிய அங்கீகாரம் இன்றி ஒதுக்கப்படுவதாக இவர்கள் புலம்புவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

    எம்பி தேர்தல்

    எம்பி தேர்தல்

    இந்த சூழலில், உள்கட்சி பிரச்சனை பிரதான மாவட்டங்களில் தலைதூக்கி உள்ளதாம். ஏனெனில் நடந்து முடிந்த தேர்தல் எடப்பாடியார் எம்பி தேர்தலைவிட சட்டமன்ற தேர்தலுக்கே முக்கியத்துவம் தந்திருந்தார். இது அவரது ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக எடுத்த தீவிர முயற்சி ஆகும்.

    இடைத்தேர்தல்

    இடைத்தேர்தல்

    ஆனால் திமுக தரப்போ, இடைத்தேர்தல்களில் கோட்டை விட்டுவிட்டு, எம்பி தேர்தல்களில் கவனம் செலுத்தியது. இதுதான் இப்போது பிரச்சனையே.. 9 தொகுதிகளில் அதிமுகவை ஜெயிக்க வைத்தது, திமுகவுக்கு பெரிய இழப்பாக உள்ளதாக நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்துள்ளார்களாம்.

    கீதாஜீவன்

    கீதாஜீவன்

    பரமக்குடி, மானாமதுரை, சாத்தூர், விளாத்திகுளம், அரூர், பாப்பிரெட்டிபட்டி, சூலூர், சோளிங்கர், நிலக்கோட்டை ஆகிய இந்த தொகுதிகளில் எதற்காக தோல்வி குறித்து ஆராய 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணையும் ஆரம்பமானது. அப்போதுதான் ஒரு விஷயம் தெரியவந்தது, தூத்துக்குடி உள்ளிட்ட தொகுதிகளில் கட்சி தலைமை முதல் யாருமே சரியான ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் தரவில்லை என்பது. இதற்கு கீதாஜீவனை பகிரங்கமாக குற்றம் சாட்டவும் செய்தார்கள்.

    தப்புக்கணக்கு

    தப்புக்கணக்கு

    இடைத்தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகளில் திமுக கோட்டை விட காரணம், சாதி, செல்வாக்கு வைத்து ஈஸியா ஜெயிச்சிடலாம்னு தப்புக் கணக்கு போட்டதுதான் என்பது தெரியவந்துள்ளதாம். இதனால் மாவட்ட திமுகவில் நிறைய குழப்பங்களையும், சின்ன சின்ன பிரச்சனைகளையும் திமுக நிர்வாகிகள் எழுப்பி வருகிறார்களாம். விரைவில் இதை எல்லாம் களையப்பட்டால்தான் உள்ளாட்சி தேர்தலிலாவது விட்டதை பிடிப்போம் என்கிறார்கள் உடன்பிறப்புகள்!

    English summary
    Sources say that there are some disputes in the DMK and MK Stalin is expected to intervene and settle this issue immediately
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X