சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைச்சரையும் கடுப்பேற்றிவிட்டதே இந்த கஜா புயல்! குழப்பமோ, குழப்பம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் திசை மாற்றம்.... குழப்பும் கஜா புயல்- வீடியோ

    டெல்லி: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காணப்பட்ட நிலையில் பின்னர் அது புயலாக உருவெடுத்ததாக வானிலை இலாகாவால் அறிவிக்கப்பட்டது.

    இந்த புயலுக்கு கஜா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த புயல் அத்தனைபேருக்கும் டிமிக்கி கொடுத்து வருகிறது.

    புயல் நகரும் திசை என்பதிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முதலில் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா நடுவே கரையை கடக்கும் என்ற அளவில் கணிக்கப்பட்டது. ஆனால் நேற்றுமுன்தினம் மாலையில், இந்த நிலை மாறி, புயல் கடலூருக்கும் பாம்பனுக்கும் நடுவே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று மீண்டும் புயல் திடீரென மேற்கு நோக்கி வருவதாக செய்தி பரவியுள்ளது.

    வேக வேறுபாடு

    வேக வேறுபாடு

    புயல் நகரும் வேகத்திலும் வித்தியாசம் இருந்து வருகிறது. நேற்று அதிகாலை ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து பிறகு நான்கு கிலோமீட்டர் வேகத்தில் குறைந்தது. ஆனால் மதியம் மும்மடங்காக வேகம் அதிகரித்து 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது. இன்று காலை 25 கிமீ வேகத்தில் அதிகரித்தது. பிறகு 18 கி.மீ வேகமாக குறைந்துள்ளது.

    வரும்.. ஆனா

    வரும்.. ஆனா

    புயலின் வேகம் மற்றும் அதன் திசை தெரியாமல் விழி பிதுங்கி போயுள்ளனர் தனியார் வானிலை ஆய்வாளர்கள். இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கும் கூட இந்த புயல் புரியாத புதிர்தான். அங்கே வருகிறது எங்கே வருகிறது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே தவிர, இன்னும் புயல் வந்தபாடில்லை.

    இரவுதானாம்

    இரவுதானாம்

    இன்று மதியம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலையில்தான் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு, இன்று இரவு கரையை கடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் கரையை கடக்க கூடிய நேரத்தில் மற்றும் அது நகர்ந்து வரும் வேகத்தில் மாறுபாடுகள் இருப்பதால் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

    சோம்பேறி புயல்

    சோம்பேறி புயல்

    இப்படியாக கஜா புயல் போக்கு காட்டி வருவதால் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுப்பாகிவிட்டார். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், கஜா ஒரு சோம்பேறி புயல். ஊடகங்கள் காட்டும் வேகத்தை கூட அந்த புயல் காட்டவில்லை. அதனால்தான் இத்தனை மெதுவாக நடந்து வருகிறது என்று சொன்னாரே பார்க்கலாம்.

    English summary
    Confusion on Cyclone Gaja continues, as it's playing hide and seek with IMD officials.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X