சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸை வளைத்து சித்து விளையாட்டை ஆடலாமா? அதிமுக முகாம் ரகசிய ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக மீது கடும் கோபத்தில் காங்கிரஸ் இருப்பதால் அக்கட்சியை வளைத்து சித்து விளையாட்டு ஆடுவது குறித்து அதிமுக தரப்பில் ரகசிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதாம்.

திமுக தலைவர் ஸ்டாலின் திடீரென ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். இதனால் காங்கிரஸ் தரப்பு படு அப்செட்டானது. இந்த தகவல் அதிமுக தலைமைக்கும் கிடைத்தது.

Cong. to contest in Rajya sabha election with AIADMK Support?

இதையடுத்து காங்கிரஸை வைத்து என்ன மாதிரியான ஆட்டத்தை ஆடலாம் என்று தமக்கு நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் டீமிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் முதல்வர். இதனடிப்படையில் முக்கிய அமைச்சர்கள் ஒன்று கூடி காங்கிரஸை முன்வைத்து எப்படி கேம் ஆடலாம் என கணக்குப் போட்டிருக்கின்றனர்.

 ராஜ்யசபா எம்.பி. கனவில் கே.எஸ். அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜ்யசபா எம்.பி. கனவில் கே.எஸ். அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், ஈவிகேஎஸ் இளங்கோவன்

காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் திமுகவால் 2 ராஜ்யசபா எம்.பி. இடங்களை எளிதாக பெற்றுவிட முடியும். காங்கிரஸ் கட்சியை வளைத்து தனியே வேட்ராஜ்யசபா எம்.பி. கனவில் கே.எஸ். அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், ஈவிகேஎஸ் இளங்கோவன் பாளரை நிறுத்த வைத்தால் திமுகவுக்கு ஆட்டம் காட்டிவிடலாம் என்பது அமைச்சர்கள் கணக்கு.

அதாவது ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. இதனடிப்படையில் 2 எம்.பிக்களை திமுக பெற்றுவிடும். திமுக- முஸ்லிம் லீக் அணியில் எஞ்சியிருப்பது 31 எம்.எல்.ஏக்கள். அதேபோல் அதிமுகவிடம் சபாநாயகர் உட்பட 125 பேர் உள்ளனர். 3 எம்.பிக்களுக்கு 102 எம்.எல்.ஏக்கள் ஆதரவு போக எஞ்சியிருப்பது 23 எம்.எல்.ஏக்கள். இன்னொரு பக்கம் காங்கிரஸின் 7 எம்.எல்.ஏக்களும் தினகரன் 1 எம்.எல்.ஏவும் உள்ளனர்.

திமுக 3-வது வேட்பாளரை நிறுத்த- அதற்கு எதிராக காங்கிரஸும் ஒரு வேட்பாளரை நிறுத்தும் நிலையில் இரு வேட்பாளர்களுக்கும் சரிசமமாக 31 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைக்கும். இதனால் 2-வது முன்னுரிமை என்ற அடிப்படையில் இதர எம்.எல்.ஏக்கள் வாய்ப்பளிக்கமுடியும். இதில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைக்கலாம் என்பது அதிமுகவின் கணக்கு. இருப்பினும் காங்கிரஸ் கட்சியை முழுமையாக நம்பி களத்தில் இறங்க முடியுமா? என்கிற ஊசலாட்டமும் அதிமுகவிடம் இருக்கிறதாம்.

English summary
Sourcs said that AIADMK may try to field Congress Candidate against DMK in Rajya Sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X