சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எத்தனை கனவுகளுடன் வசந்தகுமார் இதை சொல்லியிருப்பார்? எல்லாம் போச்சே

Google Oneindia Tamil News

Recommended Video

    காலையில் சொன்ன கொஞ்ச நேரத்திலேயே இப்படி மாறிடுச்சே !-வீடியோ

    சென்னை: திமுக கூட்டணியில் பாமகவும் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக அரசியல் தலைவர்களில் ஒருவரான வசந்த குமார் இன்று காலை தெரிவித்திருந்தார். ஆனால், அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துவிட்டது.

    வரும் லோக்சபா தேர்தலில் பாமக திமுக கூட்டணியிலா அல்லது அதிமுக கூட்டணியில் இடம் பெறுமா என்ற கேள்விக்கு இன்று காலை வரை விடை தெரியாமல் இருந்தது.

    இரு கட்சிகளில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதில் பாமக தலைமை கடுமையான யோசனையில் மூழ்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிவந்தன.

    தகவல்கள்

    தகவல்கள்

    பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிமுக-பாஜக கூட்டணியில், பாமக இடம் பெறுவதில் விருப்பமில்லை என்றும், அதே நேரம் அன்புமணி ராமதாசுக்கு பாஜக கூட்டணியில் இடம் பெறுவதில் விருப்பம் என்றும் ஒரு தகவல்கள் வெளியாகின. சில தகவல்கள், அப்படியே நேர் எதிராகவும் கூறின. இந்த நிலையில், சென்னையில் அதிமுக தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ராமதாஸ் சந்திப்பார் என்றும் காலை முதல், தகவல்கள் வெளியாகின.

    வசந்தகுமார்

    வசந்தகுமார்


    ஆனால் காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரான, வசந்தகுமார் நெல்லையில் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், வேறு ஒரு தகவலை வெளியிட்டார். அவர் கூறுகையில் பாமக, திமுக கூட்டணியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உறுதிபடக் கூறினார். வசந்த குமார் கூறியதாவது:
    என்னை பொறுத்த அளவில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

    அப்படியெல்லாம் இல்லையே

    அப்படியெல்லாம் இல்லையே

    திருமாவளவன் போட்டியிடுகிற தொகுதியில் பாமக தேர்தல் பணியாற்ற மாட்டோம் என்று சொல்வதாக தெரியவில்லை. அவர் அப்படி என்று நான் கருதவில்லை. வெற்றி என்பதே ஒரே குறிக்கோள். அதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவார் என்று நான் நம்புகிறேன்.

    அதிமுக பாமக கூட்டணி

    அதிமுக பாமக கூட்டணி

    யாருடைய மனதும் புண்படாத அளவுக்கு தொகுதி பங்கீடு ஏற்பாடுகள் நிறைவடையும். இவ்வாறு வசந்தகுமார் தெரிவித்தார். ஆனால், இவரது பேட்டி வெளியான சில மணி நேரங்களில் அதிமுக மற்றும் பாமக நடுவே கூட்டணி இறுதியானது. 7 தொகுதிகளை பாமக பெற்றுள்ளது. பாவம் எத்தனை கனவுகளோடு காங்கிரஸ் இருந்திருக்கும்?

    English summary
    Ramadoss lead DMK party will join DMK Alliance says Tamil Nadu Congress party acting president Vasanthakumar before PMK AIADMK alliance finalize.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X