சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இந்த" இரு தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக நேரடியாக மல்லுக்கட்டு!.. போட்டி பலமா இருக்கும் போலயே

Google Oneindia Tamil News

Recommended Video

    Congress Candidates List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    சென்னை: கன்னியாகுமரி மற்றும் சிவகங்கையில் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் நேரடியாக மோதுகின்றன.

    தமிழக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அனைத்து கட்சிகளும் வெளியிட்டாகிவிட்டன. பிறகென்ன தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்.

    ஆம்! பெரும்பாலான கட்சிகள் தங்களை எதிர்க்கும் மற்ற கட்சிகளுக்கு இணையாக வேட்பாளர்களை அலசி ஆராய்ந்து தேர்வு செய்துள்ளது. அதன்படி இரு தேசிய கட்சிகளான காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் நேரடியாக மோதி கொள்கின்றன.

    எஸ் திருநாவுக்கரசு, ஜோதிமணி போட்டி.. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு எஸ் திருநாவுக்கரசு, ஜோதிமணி போட்டி.. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

    நேரடி மோதல்

    நேரடி மோதல்

    கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சராக உள்ள பொன் ராதாகிருஷ்ணனும் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக உள்ள எச் வசந்தகுமாரும் நேரடியாக மோதுகின்றனர். அது போல் சிவகங்கையில் பாஜக சார்பில் எச் ராஜா போட்டியிடுகிறார்.

    நன்கு பரிட்சயம்

    நன்கு பரிட்சயம்

    ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கன்னியாகுமரியை பொருத்தமட்டில் போட்டியாளர்கள் இருவருமே சம பலம் வாய்ந்தவர்கள்தான். மக்களுக்கு நன்கு பரிட்சயம் ஆனவர்கள்.

    நன்மதிப்பு

    நன்மதிப்பு

    பொன் ராதாகிருஷ்ணன் தனது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கையிருப்பு எதையும் வைக்காமல் அனைத்தையும் மக்கள் நல திட்டங்களுக்காக செலவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அவர் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

    பலத்த போட்டி

    பலத்த போட்டி

    அது போல் நாங்குநேரி தொகுதிக்கு எச் வசந்தகுமாரும் ஏராளமான திட்டங்களை செய்துள்ளார் என்றே கூறப்படுகிறது. இதனால் இந்த தொகுதியில் போட்டி பலமாகவே இருக்கும்.

    சூடுபிடிக்கும்

    சூடுபிடிக்கும்

    சிவகங்கையை பொருத்தமட்டில் வேட்பாளர்களை அறிவிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்தால் மட்டும்தான் அந்த தொகுதியின் தேர்தல் களம் சூடுபிடிக்குமா என்பது தெரியவரும்.

    English summary
    National parties BJP and Congress are compete each other in Kanniyakumari and Sivagangai Lok sabha constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X