சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஷ்ணுபிரசாத் சொன்னது போல.. காடுவெட்டி குருவின் ஆத்மா பாமகவை இன்னும் மன்னிக்கலையோ!

பாமக தோல்விக்கு காடுவெட்டி குரு ஆத்மா மன்னிக்காததுதான் காரணமா என தெரியவில்லை.

Google Oneindia Tamil News

Recommended Video

    தருமபுரி தொகுதி திமுக வசமாகிறது... அன்புமணிக்கு பெரும் பின்னடைவு

    சென்னை: விஷ்ணுபிரசாத் சொன்னது போலவே, காடுவெட்டி குருவின் ஆத்மா பாமகவை இதுவரை மன்னிக்கவில்லையோ என்றுதான் கேட்க தோன்றுகிறது!

    ஆரணி தொகுதியானது வன்னியர்கள் ஆதிக்கம் உள்ள தொகுதி. ராமதாசின் செல்வாக்கு உள்ள தொகுதி. இதனால் அத்தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று திமுக நிர்வாகிகளே கோரிக்கையாக வைத்தார்களாம்.

    "பாமகவோட நாம் கூட்டணி வைக்கவில்லை, இதைதவிர வேறு சில மனஸ்தாபங்களும் நம் மீது பாமக தொண்டர்களுக்கு உள்ளது. அதனால் வன்னியர் ஓட்டுக்கள் நமக்கு கிடைப்பதே கஷ்டம். பேசாமல் கூட்டணி கட்சிக்கு யாருக்காவது ஆரணியை ஒதுக்கிவிடுங்கள்" என்று திமுக தரப்பில் யோசனை சொல்லப்பட்டதாம்.

    காவிரியிலிருந்து ஜூன் மாதம் திறக்க வேண்டிய நீரை தாருங்கள்.. கர்நாடகத்தை வலியுறுத்திய தமிழகம் காவிரியிலிருந்து ஜூன் மாதம் திறக்க வேண்டிய நீரை தாருங்கள்.. கர்நாடகத்தை வலியுறுத்திய தமிழகம்

    ஸ்டாலின் பிளான்

    ஸ்டாலின் பிளான்

    அதனால் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால், அங்கு விஷ்ணு பிரசாத்தை நேரடியாக களமிக்க ஸ்டாலின்தான் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது சோடை போகவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது. அதேபோல, பிரச்சார சமயத்தில், கூட்டணி கட்சியினருடன் விஷ்ணுபிரசாத் சரியான நட்பு பாராட்டாததால் கொஞ்சம் அதிருப்தி இருப்பதாக தகவல்கள் கசிந்தன. ஆனால், அவர்களுக்கும் விஷ்ணுபிரசாத்தை விட்டால் வேறு வழியில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொண்டனர்.

    வேல்முருகன்

    வேல்முருகன்

    இப்போது விஷ்ணுபிரசாத் 6,13,390 வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றியை ஆரணியில் பெற்றுள்ளார். மத்திய, மாநில அரசுகள் மீதான கோபம் திமுக-காங்கிரசுக்கு சாதகமாகி உள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக வேல்முருகன் சப்போர்ட்டும், அவர் மூலமாக காடுவெட்டி குருவின் சப்போர்ட்டும் ரொம்ப சுலபமாக விஷ்ணுபிரசாத்துக்கு கிடைத்திருப்பதாகவே தெரிகிறது.

    காடுவெட்டி குரு

    காடுவெட்டி குரு

    இந்த வெற்றி, அன்புமணி குடும்பத்துக்குள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறதோ தெரியவில்லை. ஏனென்றால், அதிமுக-பாஜகவுடன் பாமக கூட்டணி என்றவுடன் விஷ்ணுபிரசாத் பேசிய வார்த்தைகள்தான். "போனவாரம்தான் அதிமுகவை திட்டினாங்க. அதுக்குள்ள கூட்டணி ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள் என்றால், இதன் மர்மம்தான் என்ன? உங்கள் சமுதாயத்தை அப்படியே அங்க கொண்டு போய் அடமானம் வைத்து விட்டீர்களே, தோற்கதான் போறீங்க, குரு ஆத்மா உங்களை மன்னிக்காது" என்று சொல்லி இருந்தார்.

    காதுகுத்து

    காதுகுத்து

    ஆனால் இதற்கு அன்புமணி, "விஷ்ணுபிரசாத் பேசியதில், எங்கள் கூட்டணிக்கோ, கட்சிக்கோ பாதிப்பு இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம். அவர் என்னுடைய காலேஜ் நண்பர். 30 வருஷமாக எனது மைத்துனர். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு இப்படி பேசுவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

    ஒரே ஒரு சீட்

    ஒரே ஒரு சீட்

    எனது 3 பெண்களுக்கும் அவர் மடியில் வெச்சுதான் காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினோம். எங்களை இப்படி பேசியதுக்காக அவருக்கு ஒரு சீட் கிடைத்தாலும் கிடைக்கலாம். அதுக்காக இந்த அளவுக்கு மோசமாக விமர்சனம் செய்வார்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று வருத்தத்துடன் கூறியிருந்தார் அன்புமணி.

    மன்னிக்கவில்லையா?

    மன்னிக்கவில்லையா?

    இப்போது விஷ்ணுபிரசாத்தின் வெற்றியை அன்புமணி எப்படி பார்க்க போகிறார் என்று தெரியவில்லை. அதே நேரத்தில், விஷ்ணுபிரசாத் அன்று பாமக மீது கோபப்பட்டது தவறில்லைதான் என்று எடுத்து கொள்வதா? அல்லது குருவின் ஆன்மா பாமக தரப்பை இதுவரை மன்னிக்கவில்லை என்று எடுத்து கொள்வதா என்று தெரியவில்லை.

    English summary
    Congress Candidate Vishnu Prasad won in Arani Constitution with 6,13,390 votes
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X