சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவகங்கையில் எச்.ராஜா போட்டியிட்டால்.. 3வது இடத்திற்கு தள்ளப்படலாம்.. பாண்டி செம டஃப் தருகிறாராம்!

சிவகங்கை தொகுதிக்காக காங்கிரசில் கடும் போட்டி நிலவி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சிவகங்கையில் காங்கிரஸில் யார் நிறுத்தப்படுவார்..? ஹெச்.ராஜா வேறு போட்டியிடுகிறார்

    சென்னை: இன்னும் பிரதான வேட்பாளர்களே அறிவிக்கவில்லை.. அதற்குள் காங்கிரசில் கட்டி உருள ஆரம்பித்து விடுவார்கள் போல உள்ளது சிவகங்கை தொகுதியில்!

    இந்த முறை சிவகங்கை தொகுதியில் மத்தியில் ஆளும் இரண்டு தேசிய கட்சிகளுமே களமிறங்க போகிறது. ஆனால் வேட்பாளர் இன்னும் அறிவிக்கவில்லை.

    திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் யாருக்கென்று, எந்த கோஷ்டிக்கென்று பிரித்து கொடுப்பது என்ற பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது.

    அதிமுகவின் தேர்தல் அறிக்கை அற்புதமாக உள்ளது... சொல்கிறார் நடிகர் கார்த்திக் அதிமுகவின் தேர்தல் அறிக்கை அற்புதமாக உள்ளது... சொல்கிறார் நடிகர் கார்த்திக்

    சாதி பலம்

    சாதி பலம்

    இதனால் எப்படியும் சிவகங்கையில் செல்வாக்கு பெற்றுள்ள ப.சிதம்பரம் தொகுதியை கேட்டு கொண்டிருக்கிறார். இங்கு அவரது மகன், அல்லது மருமகள் நிறுத்தப்படலாம். ஆனால் இவர்களுக்கு சாதி பலம் ஓரளவுதான் வெற்றிகரமாக இருக்கும்.

    சுதர்சனம் நாச்சியப்பன்

    சுதர்சனம் நாச்சியப்பன்

    இவருக்கு செட்டியார் சமூக ஓட்டுக்கள் குறிப்பிட்ட அளவு இருந்தாலும், அதையே முழுசாக நம்பி களம் இறங்க முடியாது. இதுபோக சிபிஐ கேஸ் சம்பந்தப்பட்ட தாக்கம் இக்குடும்பத்தினர் மீது உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, "சிதம்பரத்துக்கு எப்படி சீட் தரலாம், கூடவே கூடாது" என்று முன்னாள் எம்பி சுதர்சனம் நாச்சியப்பன் போர்க்கொடி தூக்கி உள்ளார்.

    காங்கிரஸ் எதிரி

    காங்கிரஸ் எதிரி

    இவருக்கும் இங்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. தனக்கு சீட் தரவில்லையானால், எப்படி சிதம்பரம் ஜெயிக்கிறார் என்பதை பார்க்கலாம் என்ற ரீதியில் சவால் விட்டுள்ளார். ஒருவேளை சிதம்பரம் நிறுத்தப்பட்டாலும் எதிர்க்கட்சி இவரை தோற்கடிக்கிறதோ, கண்டிப்பாக கோஷ்டிக்குள்ளேயே தோற்கடிக்கப்பட்டு விடுவாரோ என்ற ஐயம் எழுந்துள்ளது. ஆக என்றைக்குமே காங்கிரசுக்கு எதிரி காங்கிரஸ்தான் போலும்!

    எச்.ராஜா

    எச்.ராஜா

    அதேபோல, எச்.ராஜா சொந்த ஊர் என்பதால் இதே சிவகங்கைதான் வேண்டும் என்று நச்சரித்து வந்தார். ஆனால் இங்கு அதிமுகதான் போட்டியிட திட்டமிட்டு இருந்ததாம். எச்.ராஜா செய்த நெருக்கடியால் வேறு வழியில்லாமல் பாஜக வசம் ஒப்படைக்க அதிமுக ஒப்புக் கொண்டதாம். அப்படியே எச். ராஜா இங்கு போட்டியிட்டாலும் அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் இங்கு குறைவுதான்.

    பாஜகவுக்கு சிக்கல்

    பாஜகவுக்கு சிக்கல்

    மேலும், இந்த தொகுதியில் கட்சி வேலை பார்க்க ஆள் கிடையாது. அதனால் அதிமுகவையே முழுக்க முழுக்க நம்பிதான் எச்.ராஜா இறங்க வேண்டிவரும். இப்போது சிக்கல் என்னவென்றால், ஈஸியாக ஜெயிக்க கூடிய தொகுதியை தூக்கி இப்படி எச்.ராஜாவுக்கு தந்துவிட்டீர்களே என்று அதிமுக தொண்டர்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்களாம். இதனால் எந்த அளவுக்கு தொகுதியில் பாஜக வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் வேலை பார்ப்பார்கள் என்பது தெரியாது.

    பாண்டிக்கு செல்வாக்கு

    பாண்டிக்கு செல்வாக்கு

    அமமுகவில் பாண்டி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். இதனால் பெரும்பான்மையான ஓட்டுக்கள் இவருக்கு விழும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இவர் எந்த கட்சி என்று பார்க்காமல் சாதி ரீதியாக இந்த வேட்பாளரை பார்த்தால், காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதாவது 2-வது இடத்துக்கு கூட பாண்டி முன்னேறி வருவார் என்று சொல்கிறார்கள். அப்படியானால் எச்.ராஜா 3-வது... அதாவது கடைசி நிலைமைக்குதான் தள்ளப்படுவாராம்!

    English summary
    Heavy Competiton between P Chidambaram and Sudharasa Nachiyappan for Sivagangai Constitution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X