சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவசரப்பட்ட அழகிரி... ஆட்டிப்படைக்கும் மாவட்ட தலைவர்கள்... காங்.குழப்பம்

Google Oneindia Tamil News

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கைக்கு அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் சிலர் கொடுத்த அழுத்தமே காரணமாம்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் சிலருடன் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு ஏற்பட்ட லடாய் காரணமாக அழகிரியை வற்புறுத்தி அவர்கள் அறிக்கை விட வைத்துள்ளார்கள்.

அந்த அறிக்கை தேசிய தலைமை வரை சென்று பிரச்சனையை ஏற்படுத்தும் என கே.எஸ். அழகிரி சற்றும் நினைக்கவில்லை.

பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் இல்லை.. மிதப்பில் திரிகிறார்.. அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் இல்லை.. மிதப்பில் திரிகிறார்.. அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு

விமர்சனம்

விமர்சனம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை திமுக மீறிவிட்டதாக கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கை காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கே அதிர்ச்சியையும், கோபத்தையும் அளித்துள்ளது. குறிப்பாக தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், ஹாருண் ரஷீத் போன்றோர் அழகிரியிடம் அப்படி ஒரு அறிக்கை விட்டிருக்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

காங்கிரஸ் பலம் என்னவென்று தெரிந்து தான் அறிக்கையை தயார்செய்தீர்களா என்றும், கட்சி தமிழகத்தில் உயிர்ப்புடன் இருக்கிறதென்றால் திமுக கூட்டணியில் நாம் இருப்பதே காரணம் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் அழகிரியிடம் கூறியுள்ளனர். நாலாபக்கம் இருந்து தனது அறிக்கைக்கு எதிராக அதுவும் சொந்தக் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரேநாளில் அந்தர் பல்டி அடித்தார் அழகிரி.

வற்புறுத்தல்

வற்புறுத்தல்

இது தொடர்பாக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, திமுக மாவட்டச் செயலாளர்கள் சிலரின் நடவடிக்கைகள் தான் அழகிரியை இது போன்ற அறிக்கை விட வைத்தது. காங்கிரஸ் மாவட்டதலைவர்களை அவர்கள் சட்டை செய்யாததோடு சீட் பங்கீடும் உரிய முறையில் செய்யவில்லை. இதனால் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சிலர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அழகிரி திமுகவை தாக்கி அறிக்கை விட்டார் என பதில் கிடைத்தது.

கவனம்

கவனம்

இதனிடையே திமுக மாவட்டச் செயலாளர்கள் மீது காங்கிரசுக்கு வருத்தம் என்றால் அது பற்றி முறையிட்டிருக்கலாம், அல்லது வார்த்தைகளையாவது அறிக்கையில் அழகிரி கவனமாக கையாண்டு இருக்கலாம், ஆனால் கூட்டணி தர்மத்தின் படி செயல்படவில்லை என்ற பழியை சுமத்தியதை தான் தங்களால் தாங்க முடியவில்லை என்கின்றனர் திமுகவினர்.

English summary
Congress district leaders was behind the azjagiri statement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X