• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பழுது பார்க்க முடியாத அளவுக்கு சேதமாகி விட்டது... அதை மறந்து விடலாம் - குஷ்பு யாரை சொல்கிறார்

Google Oneindia Tamil News

சென்னை: தனது செயல்களாலும், நடவடிக்கைகளாலும் அடையாளமே தெரியாத அளவுக்கு கிழிந்து நார் நாராய்ப் போய் பழுது பார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்து விட்ட பழைய கட்சியை எல்லோரும் மறக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று குஷ்பு கூறியுள்ளார். நமது நாட்டுக்குத் தேவை நல்லதொரு எதிர்க்கட்சியே தவிர, எதற்கெடுத்தாலும் ஆமாம் சாமி போடும் கட்சி தேவையில்லை என்றும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டி 20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பலரும் முகம்மது ஷமியை விமர்சித்து வருகின்றனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3.5 ஓவர்களில் 43 ரன்களை கொடுத்திருந்தார். இந்தியாவின் இந்த தோல்விக்கு ஷமிதான் காரணம் என பலரும் அவரை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இவர்களில் பலரும் பாஜகவினர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஷமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், " முகமது ஷமி, நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இந்த மனிதர்கள் வெறுப்பால் நிரம்பி இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு யாரும் அன்பைத் தரவில்லை. அவர்களை மன்னித்துவிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

பெகாசஸ் ஒட்டு கேட்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு- வல்லுநர் குழு அறிவிக்கப்படும்?பெகாசஸ் ஒட்டு கேட்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு- வல்லுநர் குழு அறிவிக்கப்படும்?

சேதமடைந்து விட்டது

சேதமடைந்து விட்டது

இந்த நிலையில் குஷ்பு ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் பாஜகவை விமர்சிப்பவர்களை மறைமுகமாக கண்டித்ததோடு காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக வாரியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், நமக்கு தேவை ஊழல் இல்லாத பாரதம்தான். யாராவது தும்மினால் கூட உடனே பாஜகவைத்தான் குறை சொல்கின்றனர். தனது செயல்களாலும், நடவடிக்கைகளாலும் அடையாளமே தெரியாத அளவுக்கு கிழிந்து நார் நாராய்ப் போய் பழுது பார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்து விட்ட பழைய கட்சியை எல்லோரும் மறக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர் கட்சி

எதிர் கட்சி

நமக்கு தேவை ஆமாம் சாமி போடாத ஒரு எதிர்க்கட்சிதான். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கூட தங்களது கட்சியை எதிர்க்கட்சியாக நினைக்காத நிலையில்தான் கட்சி உள்ளது எல்லாம் காலம் என்றும் குஷ்பு பதிவிட்டுள்ளார்.

எதிர் கருத்துக்கள்

எதிர் கருத்துக்கள்

அவரது இந்த டிவீட்டுக்கு எதிர்வாதமும், வாதமும் அவரது டிவிட்டர் தளத்தில் களை கட்டியுள்ளன. நீங்கள் தமிழ்நாட்டில் தானே இருக்கிறீர்கள். நீங்கள் பாஜகவில் இணைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை இடங்களை பாஜக வென்றுள்ளது என்று கேட்டுள்ளார்.

எதை சொல்கிறீர்கள்

எதை சொல்கிறீர்கள்


கோவா மாநில அரசில் ஊழல் பெருக்கெடுத்து விட்டதாக முன்னாள் கோவா மாநில ஆளுநரும் தற்போதைய மேகாலயா மாநில ஆளுநருமான சத்யபால் மாலிக் சொன்னதைத்தான் மறைமுகமாக சொல்கிறீர்களா என்றும் குஷ்புவிடம் கேட்டுள்ளனர்.

எங்கே தாவப்போகிறீர்கள்

எங்கே தாவப்போகிறீர்கள்

பழுது பார்க்க முடியாதது என்று எதை சொல்கிறீர்கள். அடுத்து நீங்கள் எந்த கட்சிக்கு தாவப்போகிறீர்கள் என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். டிஎம்சி கட்சிக்கா ஆம் ஆத்மி கட்சிக்கா என்று கேட்டுள்ள ஒரு நெட்டிசன், பாஜகவில் இருந்து நிறைய பேர் டிஎம்சி கட்சிக்கு தாவி வருகின்றனர் நீங்களும் அங்கேயே போகலாமே என்று கூறியுள்ளார். குஷ்வுவே தனது ட்வீட் பற்றி சொன்னால் தவிர அவரது ட்வீட்டின் அர்த்தம் யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை.

English summary
Khushbu post her twitter page, We want 'corrupt mukt' Bharat. Those who blame us for even a sneeze,forget the so called grand old party is tattered n torn beyond repair by their own doings. We need an opposition n not a yes sir party,where own party members make sure it never stands as an opposition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X