சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுக்கும் மேல பொறுக்க முடியாது.. மீட்டிங்கிலேயே பொங்கிய "தலைகள்".. கமல் மேஜிக்.. வெலவெலத்த காங்.!

Google Oneindia Tamil News

சென்னை: கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக தொடர்ந்து கறார் காட்டி வருவது காங்கிரஸ் கட்சியை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. திமுகவின் கண்டிப்பை காங்கிரசில் இருக்கும் நிர்வாகிகள் யாரும் பெரிதாக விரும்பவில்லை என்கிறார்கள்.

தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. மெகா சீரியல் போல தினமும் ஒரே கதையாக எந்த மாற்றமும் இன்றி பேச்சுவார்த்தை நீடித்துக் கொண்டே செல்கிறது. திமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இதுவரை பெரிய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுப்பதை திமுக விரும்பவில்லை.

முக்கியமாக காங்கிரஸ், மதிமுக கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவது திமுக கடுமையாக திணறி வருகிறது. இதுதான் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் செல்ல காரணம் ஆகும்.

டெல்லி மாநகராட்சி இடைத் தேர்தல்.. பாஜகவுக்கு படுதோல்வி! மொத்தமாக அள்ளிய ஆம் ஆத்மி, காங்கிரஸ் டெல்லி மாநகராட்சி இடைத் தேர்தல்.. பாஜகவுக்கு படுதோல்வி! மொத்தமாக அள்ளிய ஆம் ஆத்மி, காங்கிரஸ்

திமுக திட்டம்

திமுக திட்டம்

190 இடங்களில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. இதனால் மீதம் இருக்கும் இடங்களை மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கும் எண்ணத்தில் திமுக உள்ளது. ஆனால் திமுகவின் இந்த இமாலய திட்டத்திற்கு காங்கிரஸ், மதிமுக நோ சொல்லிவிட்டது. திமுக சொல்வதை விட இரட்டை மடங்கில் இரண்டு கட்சிகளும் இடங்களை கேட்கிறது.

 கோரிக்கை

கோரிக்கை

காங்கிரஸ் கட்சிக்கு திமுக 19-24 இடங்களை வழங்க ரெடியாக இருந்தது. ஆனால் காங்கிரஸ் 40 இடங்கள் வரை கேட்டது. இதற்கு திமுக ஒத்துழைக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த காங்கிரஸ் என்ன செய்யலாம், எப்படி காய்களை நகர்த்தலாம் என்று ஆலோசனை செய்து வருகிறது. இதற்காக இன்று சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆலோசனை

ஆலோசனை

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், வீரப்பமொய்லி ஆகியோர் இந்த அவசர செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் திமுக கூட்டணியில் இருக்கலாமா வேண்டாமா என்று ஆலோசனை செய்துள்ளனர். நீண்ட நேரம் செய்யப்பட்ட ஆலோசனைக்கு பின் திமுகவுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம். என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். கூட்டணியில் எந்தப் பிரச்னையும் வேண்டாம். கூட்டணியை விட்டு விலகும் முடிவை எல்லாம் இப்போது எடுக்க வேண்டாம் என்ற முடிவை காங்கிரஸ் எடுத்து உள்ளது. ஆனால் திமுக கீழே இறங்கி வரவில்லை காங்கிரஸ் மற்ற ஆப்ஷன்களை பார்க்க வேண்டும் என்று நிர்வாகிகள் பலர் இந்த மீட்டிங்கில் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோரிக்கை

கோரிக்கை

திமுக கூடுதல் இடங்களை கொடுக்கவில்லை என்றால் கமல்ஹாசனுடன் சேருங்கள். அங்கு நினைத்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்று முக்கிய தலைகள் சிலர் ஆலோசனை வழங்கி உள்ளனர். ஒரு அளவுக்குத்தான் பொறுக்க வேண்டும், 19 இடங்கள் எல்லாம் ரொம்ப கம்மி என்று நிர்வாகிகள் சிலர் கோபமாக மீட்டிங்கில் பேசி உள்ளனர்.

சிக்கல்

சிக்கல்

இதனால் வேகமாக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. கமலின் மூன்றாவது அணி வேகமாக உருவாகி வருவதால் காங்கிரஸ் இதை ஒரு ஆப்ஷனாக வைக்க தொடங்கி உள்ளது. கமலின் மேஜிக் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற கூட்டணிகளில் இருக்கும் அதிருப்தி கட்சிகளை மநீம நோக்கி இழுத்து வருகிறது.

டெட் லைன்

டெட் லைன்

திமுக காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தத்திற்கு காங். தேசிய மேலிடம் இன்று மாலை வரைதான் டெட் லைன் கொடுத்து உள்ளதாக தகவல்கள் வருகிறது. இதனால் தமிழக காங்கிரசுக்கு கொஞ்சம் அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நீடித்தால் கண்டிப்பாக திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழன்று கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

English summary
Tamilnadu Assembly Election: Congress holds a senior members meeting to discuss the alliance turmoil with DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X