சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவிபேட்டுக்குள் பாம்பு புகுந்ததற்கு மோடி என்ன பண்ணுவார்?.. குஷ்பு டிவீட்டால் கிளம்பிய சர்ச்சை

பிரதமர் மோடியை விமர்சித்து குஷ்பு ட்வீட் போட்ட விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவில் விவிபேட்டுக்குள் பாம்பு.. குஷ்பூ கிண்டல் ட்வீட்- வீடியோ

    சென்னை: ஓட்டுப்பதிவு கருவியில் பாம்பு.. வெளியான சம்பவம் குறித்து, மோடி அரசாங்கத்தில் எதுவும் நடக்கும் என நடிகை குஷ்பு கிண்டலடித்துள்ளார்.

    கேரளாவில் நேற்று தேர்தல் நடந்தது. அப்போது விவிபேட் எனப்படும் ஒப்புகைச்சீட்டு இயந்திரமானது நிறைய இடங்களில் கோளாறு ஆனது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்தார்கள்.

    மேலும் கண்ணூரு தொகுதிக்கு உட்பட்ட மயில் கண்டக்கை வாக்குச்சாவடி மக்கள் ஓட்டு போட்டு கொண்டிருந்தனர்.

    உரிய ஆவணங்கள் வைத்திருப்பவர்களை நியாயமான முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.. ஜி.கே.வாசன்உரிய ஆவணங்கள் வைத்திருப்பவர்களை நியாயமான முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.. ஜி.கே.வாசன்

    குட்டி பாம்பு

    குட்டி பாம்பு

    அப்போது விவிபேட் மிஷினில் இருந்து திடீரென ஒரு குட்டி பாம்பு வெளியே வந்துவிட்டது. இதை பார்த்ததும் ஓட்டு போட வந்தவர்கள் கத்தி கூச்சலிட்டார்கள். அதனால் வாக்குபதிவு கொஞ்ச நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தாமதமும் ஏற்பட்டது. மிஷினில் இருந்து பாம்பு அகற்றப்பட்ட பின்னர்தான் வாக்குப்பதிவு தொடங்கியது.

    பாம்பு மேட்டர்

    பாம்பு மேட்டர்

    இந்த பாம்பு மேட்டர்தான் பெரிய சர்ச்சையாக வெடித்தது. காங்கிரசின் முன்னாள் அமைச்சர் சசி தரூர்தான் இது சம்பந்தமாக "இந்திய ஜனநாயகத்தில் இதுதான் முதல் முறை" என்று முதல் கமெண்ட் சொன்னார். அடுத்ததாக குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். சசிதரூர் சொன்ன பதிவை தனது ட்விட்டரில் குஷ்பு ஷேர் செய்ததுடன், "மோடி ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று பதிவிட்டார். இதற்கு ஏகப்பட்ட கமெண்ட்கள் எதிர்ப்பும், ஆதரவுமாக எழ ஆரம்பித்தது.

    தாறுமாறு கேள்விகள்

    தாறுமாறு கேள்விகள்

    சசிதரூர் சொன்னதை விட்டுவிட்டு, குஷ்பு சொன்ன கருத்தை நெட்டிசன்கள் பிடித்து கொண்டார்கள். "விவிபேட் இயந்திரத்தில் பாம்பு புகுந்ததற்கு கூடவா மோடியை விமர்சிக்க வேண்டும்? மோடி இயந்திரத்தையோ பாம்பையோ சப்ளை செய்தாரா?" என்றெல்லாம் குஷ்புவை தாறுமாறாக கேள்வி கேட்டு வருகிறார்கள்.

    ட்வீட் இல்லை

    ட்வீட் இல்லை

    ஆனால் குஷ்புவோ, தன்னை பற்றி விமர்சித்தவர்களுக்கு, தன்னுடைய ஒரு படத்தை பகிர்ந்து இது விமர்சகர்களுக்கான பிரத்தியேக படம் என்று சொல்லி மேலும் வெறுப்பேற்றி உள்ளார். மெஷினில் பாம்பு தலைதூக்கியது போய், குஷ்பு சொன்ன விவகாரம்தான் தலைதூக்கி வருகிறது! (ஆனால் இவ்வளவு பேசிய குஷ்பு தான் போட்ட பதிவை எடுத்துவிட்டாரா என தெரியவிலலை.. அந்த பதிவை அவரது ட்விட்டர் பக்கத்தில் இப்போது காணோம்)

    English summary
    Kushboo says nothing will happen in the Modi government about Snake in Voting Booth
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X