சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாநிதியை பாருங்கள் ராகுல்.. பல பாடங்கள் கற்கலாம்.. மீண்டும் வரலாம்.. மிரட்டலாக!

கருணாநிதியிடம் ராகுல் காந்தி நிறைய பாடம் கற்க வேண்டும்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காங். தலைவர் ராகுலிடம் போனில் பேசிய ஸ்டாலின்!- வீடியோ

    சென்னை: இந்த ஒரு தேர்தலுக்கே இப்படி ராகுல் காந்தி சுருண்டு விழுந்துட்டால் எப்படி என்றுதான் நமக்கு கேட்க தோன்றுகிறது.

    காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய படுதோல்வியை சந்தித்துள்ளது. அமைப்பு ரீதியாக பலவீனமாக காங்கிரஸ் இருப்பதைத்தான் இது வெளிப்படுத்தி உள்ளது.

    6 மாசத்துக்கு முன்னாடி கிடைத்த வெற்றியைக்கூட காங்கிரஸ் கட்சியால் தக்க வைத்து கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் இவை இந்தி மொழி பேசும் மாநிலங்கள்தான்!

    ஓட்டு போட காசே தரலைன்னு யாராவது ஒருத்தர சொல்ல சொல்லுங்க.. சீமான் அதிரடி அட்டாக் ஓட்டு போட காசே தரலைன்னு யாராவது ஒருத்தர சொல்ல சொல்லுங்க.. சீமான் அதிரடி அட்டாக்

    தேர்தல் வேலை

    தேர்தல் வேலை

    இது எல்லாவற்றையும் விட, அசோக் கெலாட், கமல்நாத் போன்ற கட்சியின் மூத்த தலைவர்களின் அட்வைஸ்படிதான் எல்லா தேர்தல் வேலைகளும் நடந்தது. ஆனால், அடிமட்டத் தொண்டர்களை பலப்படுத்தவும், கட்சியை தொடர்ந்து வலுப்படுத்தவும் காங்கிரஸ் தவறிவிட்டதாகவே தோன்றுகிறது.
    பாஜகவை சுற்றி சுற்றி வந்து குற்றம்சாட்டியது ரபேல் ஒன்றைதான்! இப்போது, பதவியை ராஜினாமா செய்ய போகிறேன் என்று ராகுல் சொல்லவும், அவரை ஒவ்வொருவராக சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளனர்.

    இளமை துடிப்பு

    இளமை துடிப்பு

    பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியை இளமை துடிப்புடன் வலம் வந்த ராகுலால் சீர்தூக்க முடியாமல் போய்விட்டது ஏன்? ப.சிதம்பரம், கமல்நாத் போன்ற மூத்த தலைவர்கள் தனக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று ராகுல் குமுறியது உண்மையா? அல்லது மோடிக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும், தங்கள் மகன்கள் போட்டியிடும் இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்று பிரியங்கா காந்தி புலம்பியது உண்மையா?

    ப.சிதம்பரம்

    ப.சிதம்பரம்

    மூத்த தலைவர்களை எதிர்த்து ராகுலால் எதையும் கண்டிக்க முடியாமல் உள்ளதா என தெரியவில்லை. ஆனால் ராகுல் நினைத்திருந்தால், ப.சிதம்பரம் மகனுக்கு சீட் தராமல் இருந்திருக்க முடியும். அதற்கு உரிமையும் உள்ளது. அதனால் சீட் தரும்படி போன்ற நெருக்கடிக்கு ராகுல் ஆளானாரா என்றும் புலப்படவில்லை.

    பப்பு

    பப்பு

    ஆனால் இந்த ஒரு தோல்விக்காகவே பதவியை ராஜினாமா செய்வது என்பது சரியில்லை. ஏற்றுக் கொள்ளக்கூடியதும் இல்லை. ஓரிரு வருடங்களாகத்தான் பப்பு என்ற விமர்சனம் மறைந்து, பக்குவம் நிறைந்த தலைவர் என்ற அடையாளத்தை பெற்று வருகிறார் ராகுல். ஆனால் இந்த நேரத்தில் ராஜினாமா என்பது ராகுலை மேலும் பலவீனமுடைய நபராகவே காட்டும்.

    கருணாநிதி

    கருணாநிதி

    எனவே இப்போதைக்கு தேவை தன்னம்பிக்கையே! இதற்கு முன்னுதாராணமாக நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி ஆகியோரது தோல்விகளையும், அவர்கள் அதை சந்தித்த விதத்தையும் உதாரணமாக பார்க்க வேண்டும். அதை விட முக்கியமாக கருணாநிதியின் வரலாறை ராகுல் உற்று நோக்கினால் பல பாடங்களை அது அவருக்குக் கற்றுத் தரும்.

    அவமானங்கள்

    அவமானங்கள்

    எத்தனையோ தோல்விகள், சரிவுகள், சறுக்கல்கள், அவமானங்கள், வீழ்ச்சிகளை கண்டவர் கருணாநிதி. திமுகவுடன் அதிக முறை கூட்டணி வைத்தது காங்கிரஸ்தான். தன்னுடைய தோல்விகளை ஒவ்வொன்றும் வெற்றியாக மாற்றி காட்டி, திரும்பவும் அதே காங்கிரசுடன் கூட்டணி வைப்பார் கருணாநிதி.

    ராஜதந்திரம்

    ராஜதந்திரம்

    கூட்டணிகளை அமைப்பதில் கில்லாடி. வெற்றி பார்முலாவை வகுத்துத் தருவதோடு, அதன்படி தான் உள்பட அனைவரும் செயலாற்றுவதையும் உறுதி செய்பவர். வாரிசு அரசியலை திறம்பட சமாளித்தவரும் கூட. தன்னுடைய இருப்பின் தேவையை உணர்ந்தவர் கருணாநிதி. தான் மனசார ஏற்றுக்கொண்ட சமூக நீதி எனும் தத்துவத்திற்காக, அதனை முழுமையாக செயலாக்கிக் காட்டுவதற்காக தன்னுடைய 80 வருட வாழ்க்கையை செலவிட்டவர் என்பதைதாண்டி வேறு உதாரணம் ராகுலுக்கு என்ன சொல்ல?

    ராகுலுக்கு இப்போதைய தேவை ராஜதந்திரம்.. இதுதான் முக்கியமாக தேவை.

    English summary
    Congress Leader Rahul Gandhi, needs diplomacy now. He should learn this to Karunanidhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X