சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அறிவாலயத்தில் கே.எஸ்.அழகிரி- ஸ்டாலின் சந்திப்பு.. திமுக-காங். கூட்டணியில் விரிசல் இல்லை என அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    TN assembly elections 2021 | DMK to break with Congress

    சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணி இடையே அனைத்து பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.

    ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இடங்களை ஒதுக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    அதில் கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை. திமுக- காங்கிரஸ் கூட்டணி வெறுமனே தேர்தல் கூட்டணி அல்ல. ஒரு கொள்கை கூட்டணி. இந்திய அளவில் ஜனநாயகத்தை காப்பதற்கான கூட்டணி.

    வெளியேற்றப்படுமா காங்கிரஸ்.. பிரிந்தால் கதி என்ன.. கை கொடுப்பாரா கமல்.. திமுக கூட்டணி என்னாகும்?வெளியேற்றப்படுமா காங்கிரஸ்.. பிரிந்தால் கதி என்ன.. கை கொடுப்பாரா கமல்.. திமுக கூட்டணி என்னாகும்?

    ஒத்துழைப்பு

    ஒத்துழைப்பு

    திமுக கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக செயல்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதே வேளையில் உள்ளாட்சி தேர்தலில் திமுகவை விட அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கு திமுக போட்டியிட்ட இடங்களில் காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் ஸ்டாலினின் கோபம் அதிகரித்துள்ளது.

    ஆதங்கம்

    ஆதங்கம்

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோனியாவை சந்தித்த கே எஸ் அழகிரி, தானும் ஸ்டாலினும் இணைந்த கரங்கள் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். எனினும் திமுக மூத்த தலைவர்கள் டிஆர் பாலு, துரைமுருகன் உள்ளிட்டோர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

    அண்ணா அறிவாலயம்

    அண்ணா அறிவாலயம்

    அது போல் அதற்கு பதிலடியாக கார்த்தி சிதம்பரமும், மோகன் குமாரமங்கலமும் தங்கள் கருத்தை தெரிவித்தனர். எனினும் திமுக- காங்கிரஸ் இடையே சுமூகம் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை கே எஸ் அழகிரி, எம்எல்ஏ கே ஆர் ராமசாமி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே வீ தங்கபாலு, ஆரணி எம்பி விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

    முற்றுப்புள்ளி

    முற்றுப்புள்ளி

    சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு குறித்து கே எஸ் அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு இல்லை. திமுக காங்கிரஸ் கூட்டணியில் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது குறித்து பேசியுள்ளோம்.

    விவாதங்கள்

    விவாதங்கள்

    இரு கட்சிகளுக்கிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். காங்கிரஸ் தலைமை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது. ஒரு நல்ல கூட்டணி நன்றாக செல்ல வேண்டும் என்பது எங்களுக்கே தெரிந்தது. எனவே கட்சி தலைமையின் அறிவுறுத்தல் எல்லாம் இல்லை. நாங்களாகவே இங்கு வந்தோம்.

    செல்வாக்கு இல்லை

    செல்வாக்கு இல்லை

    சட்டமன்றத் தேர்தலிலும் அதன் பிறகும் எங்கள் கூட்டணி தொடரும். திமுக கூட்டணியை அதிமுக கூட்டணியுடன் ஒப்பிட முடியாது. தனித்து நிற்க இந்தியாவில் எந்தக் கட்சிக்கும் செல்வாக்கு இல்லை என்றார் கே எஸ் அழகிரி.

    English summary
    Senior Tamilnadu Congress leaders going to meet DMK President MK Stalin at Anna Arivalayam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X