சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல் காந்தி குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்... காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மேகதாது அணை கட்டுவோம் என ராகுல்காந்தி கூறியதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பாதது ஏன்? என நேற்று முன் தினம் முதலமைச்சர் பழனிசாமி கேட்ட கேள்விக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று விளக்கமளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தனர்.

Congress MLAs walked out From Tamil Nadu assembly

தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் குடிநீர் பிரச்சினை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளதாகவும், ஏரி, குளங்கள், கால்வாய்கள் சரிவர தூர் வாரப்படவில்லை. ஆனால் அரசு இதனை முறையாக செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

4 எம்பிக்களை வேண்டும் என்றே பாஜகவுக்கு தாரை வார்த்தாரா நாயுடு.. பகீர் கிளப்பும் தெலங்கானா அரசு 4 எம்பிக்களை வேண்டும் என்றே பாஜகவுக்கு தாரை வார்த்தாரா நாயுடு.. பகீர் கிளப்பும் தெலங்கானா அரசு

கடல் நீரை குடிநீராக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 10 ஆண்டில் தமிழ்நாட்டில் தண்ணீரை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உங்கள் கட்சி தலைவர் ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசும் போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவரின் பதில் என்ன? என்று நான் பலமுறை கேட்டுள்ளேன். அதற்கு பதில் இல்லை. இப்போது உங்களிடம் கேட்கிறேன். உங்கள் தலைவர் பேசியதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள். இப்போதே நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதற்கு ஏதாவது குரல் கொடுத்தீர்களா? ஆனால், இந்த அரசை குறை கூறுகிறீர்கள் என்றார்.

மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியதாக பொய்யான தகவலை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட முடியுமா என்று கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு, பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தனர்.

English summary
Mekedatu Dam Issue: Congress MLAs walked out From Tamil Nadu assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X