சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி

பாஜகவின் விமர்சனத்துக்கு எம்பி ஜோதிமணி பதிலடி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: போபர்ஸ் வழக்கு குறித்து.. தமிழக பாஜக விமர்சிக்க.. அதற்கு பதிலடி தந்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ட்வீட் ஒன்றினை போட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் 73-வது பிறந்த நாளை தொண்டர்கள் இன்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

சோனியா காந்தியின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.. தனது ட்விட்டரிலும், 'சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்' என்று வாழ்த்து செய்தியுடன் ட்வீட் பதிவிட்டிருந்தார்.

ஜோதிமணி

மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் சோனியா காந்திக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். அதன்படி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சோனியா காந்தி தைரியம், நம்பிக்கை, இரக்கம், கண்ணியம், கருணை போன்றவற்றின் மொத்த உருவம். அவரின் முதன்மையான திட்டங்களான உணவு பாதுகாப்புச் சட்டம், 100 நாள் வேலை திட்டம் ஆகியவை கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளன. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசியலில், அதிக காலம் காங்கிரஸ் தலைவராக விளங்குகிறார். பலருக்கும் ஊக்கமளிப்பவர்" என்று பதிவிட்டிருந்தார்.

என்னது மறைமுக தேர்தலா.. கூடாது.. ஹைகோர்ட்டில் திருமாவளவன் வழக்குஎன்னது மறைமுக தேர்தலா.. கூடாது.. ஹைகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு

தலைகுனிவு

இதனிடையே, தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் முதல் மிகப்பெரும் ஊழலாம் போபர்ஸ் ஊழல் செய்து தலைகுனிவை ஏற்படுத்திய @Incindia வின் சேவையை மக்கள் புறக்கணித்ததை நினைவு கூரும் நாள் இன்று" என பதிவிடப்பட்டிருந்தது.

வாஜ்பாய்

இந்த பதிவிற்கு ஜோதிமணி பதிலடி தந்து திரும்பவும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "போபர்ஸ் வழக்கில் எவ்வித தவறும் நடக்கவில்லை என்ற நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்டு,மேல் முறையீடு செய்வதில்லை என்று வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதுகூட தெரியாமல் ஒரு கட்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர்வாசிகள்

ஜோதிமணியின் இந்த ட்வீட்டுக்கு பல்வேறு வரவேற்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதே சமயம், "ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுபோன்ற வழக்கின் உண்மை நிலையை கூட தெரியாமல் பதிவிடுவது கண்டனத்துக்குரியது..!!.." என்றும், "ரபேல் ஊழலே இல்லைன்னு சுப்ரீம் கோர்ட் சொன்னதுக்கு பிறகும் உங்க ராகுல் தேர்தல் பிரச்சாரத்துல ரபேல் ஊழல்ன்னு கூப்பாடு போட்டது ஏனோ?" என்றும் ட்விட்டர்வாசிகள் கேள்விகளை எழுப்பியும் வருகின்றனர்.

English summary
karur congress mp jothimani has criticized tn bjps comment on congress
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X