இடஒதுக்கீடு இன்னும் ஏன் அவசியம்.. சமூக வலைதளங்களை அதிர வைத்த சுபத்ரா தேவி பேச்சு.. பாருங்க
சென்னை: இடஒதுக்கீடு இன்னும் ஏன் அவசியம் என்பதற்கான நான்கு காரணங்களை பட்டியலிட்டு சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சி நிர்வாகி சுபத்ரா தேவி. அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இடஒதுக்கீடு ஏன் இன்னமும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்களுக்கு தர வேண்டும்.. எல்லாருமே ஒன்றுதானே, ஏன் இந்த இடஒதுக்கீடு தொடர்கிறது என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இடஒதுக்கீடு என்பது அரசியலில் இடஒதுக்கீடு (தனித் தொகுதிகள்), கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என மூன்று வகைப்படும்.

சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்க, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்றும் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை உயர்சாதியினரே வகிக்கிறார்கள். அதனால், அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் பிறப்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் இருக்கும்வரை, இடஒதுக்கீட்டு முறை அவசியம் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இடஒதுக்கீடு எவ்வளவு அவசியம் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகி சுபத்ரா தேவி பேசிய பேச்சு பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இடஒதுக்கீடு குறித்து சுபத்ரா தேவி கூறுகையில், சாதியை பொறுத்தவரை, நன்கு படித்த பெற்றோர் தான் மிக முக்கியமான விஷயம்.. உயர்ஜாதியில் பார்த்தீர்கள் என்றால், 10ல் 9 பேரின் பெற்றோர் படித்திருப்பார்கள்..
ஆனால் எஸ்டியில் 10ல் ஐந்து பேரின் பெற்றோர் படித்திருக்க மாட்டார்கள். ஏன் எழுத படிக்கவே தெரியாது.. எனவே ஒரு குழந்தை பிறக்கும் போதே, எழுதப்படிக்க தெரியாத அம்மா அப்பாவிற்கு பிறக்கிறது. இன்னொரு குழந்தை, நன்றாக படித்த டாக்டர், என்ஜினியர்களின் பிள்ளைகளாக இருக்கிறது.. இவர்கள் இரண்டு பேரின் மதிப்பெண்ணையும் ஒப்பிட்டு பார்ப்பது எவ்வளவு பெரிய அநியாயம் இது.. சாதியில் அது பெரிய வேறுபாடு இருக்கும்.
இன்னொரு விஷயம் பார்த்தீங்க அப்படீன்னா, செல்வம்.. ஒரு குழந்தை நடந்து போகும்.. பேருந்து பிடித்து செல்லும்.. அதற்கே நிறைய நேரம் செலவு செய்யும் அந்த குழந்தை.. இன்னொரு குழந்தை ஒய்யாரமாக காரில் போகும்.. இந்த ஒரு வேறுபாடு இருக்கும்..
மூன்றாவது விஷயம் பெரிய ஆட்களின் பழக்கம் மற்றும் அவர்களுடன் உள்ள தொடர்புகள். இது என்னென்னா.... இவ்வளவு ரிசர்வேசன் வந்ததுக்கு பிறகும் சிவில் சர்வீஸில் உள்ள உயர் பதவிகளில் வருபவர்கள் இப்போது வரை 93 சதவீதம் பேர் பொதுப்பட்டியலைச் சேர்ந்தவர்கள் தான்.. நீங்கள் ஜெனரல் கேட்டகிரி பிள்ளையாக பிறக்குறீங்க அப்படீன்னா, பெயர் வைக்குற விழாவிற்கே இரண்டு ஐஏஎஸ் ஆபிசர்கள் வருவார்கள்.. கலெக்டர்கள் வருவாங்க.. இரண்டு பெரிய தொழில் அதிபர்கள் வருவார்கள்... இந்த மாதிரி இருக்கும்.. குழந்தை பிறக்கும்போதே இப்படி இருக்கும். இன்னொன்று அரசு மருத்துவமனையில் அனாதை மாதிரி பிறந்திருக்கும்.. அழுது கொண்டே இருக்கும்.. அதை பார்க்க கூட யாரும் இருக்க மாட்டார்கள்..
excellent speech - Reservation. pic.twitter.com/5Hrd1gAL40
— GOWTHAM SURESH (@Gowthamsure23) April 27, 2024
நான்காவது விஷயம் பார்த்தீங்க அப்படீன்னா சமூகத்தில் அவர்களுக்கான மரியாதை.. சமூக மரியாதை என்னவென்று பார்த்தால், தலித் குழந்தைக்கு பார்த்தீங்க அப்படீன்ன.. பெயரே பாவாடை என்று வைப்பார்கள்.. பாவாடை, அம்மாவாசை, மண்ணங்கட்டி என பெயர் வைப்பார்கள்.. நீங்க பிறக்குறீங்க சார்.. உங்களுக்கு மண்ணாங்கட்டி என்று பெயர் வைப்பார்கள்... ஆனால் உங்களுக்கு தெரியாது... அப்படி கூப்பிட்டால் உங்கள் தன்னம்பிக்கை ஒரு ஸ்டேஜ்க்கு அப்புறம் எப்படி இருக்கும்..
மண்ணாங்கட்டி என்ற பெயருக்கு உங்களுக்கு முதலில் அர்த்தம் தெரியாது.. நீங்கள் ஜாலியாக திரும்பி பார்த்திருப்பீர்கள்.. ஒரு ஸ்டேஜ்க்கு அப்புறம் அர்த்தம் தெரியும்.. அந்த பெயரை சொல்லி சிரிப்பார்கள்.. அப்போது உங்கள் தன்னம்பிக்கை உடைந்து கொண்டே வரும்.. ஆனால் உயர் ஜாதியில் பிறந்தவர்களின் குழந்தையை, சிறியதாக இருக்கும் போதே பண்ணையார் மனநிலையில், அய்யா வாங்க.. என்று கூப்பிடுவார்கள்.. இந்த மாதிரி பெரிய வேறுபாடுகள் உள்ளது.. நம்முடைய தன்னம்பிக்கையை உடைப்பதற்காகவே உள்ளது தான் இந்த ஜாதிய வேற்றுமை.. ஆதிக்கம் எல்லமே.-" இவ்வாறு கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications