சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுற்றிபின்னப்படும் சதி வலை.. உஷாரான காங்கிரஸ்.. அடித்த பல்டி... திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீட்டில் திமுகவிடம் பேரம் பேச மாட்டோம் என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வெளிப்படையாக அறிவித்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை தந்துள்ளது. எப்போதும் கறறாக இருக்கும் காங்கிரஸ் இந்த முறை தன்னை சுற்றி நடக்கும் சதிவலைகளை உணர்ந்து செயல்படுவதாக தெரிகிறது.

பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியமைக்க முடியாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுத்ததே காரணம் என்ற பரவலாக பேச்சு உள்ளது.

இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று திமுக தலைமைக்கு நெருக்கடி வர ஆரம்பித்துள்ளது.

 "ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்.. திமுக கூட்டணி சூப்பரா இருக்கு.. பேரம் பேச மாட்டோம்".. காங். அதிரடி

திமுக செய்த தவறு

திமுக செய்த தவறு

ஏனெனில் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டு வெறும் 8 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஒருவேளை அதிமுக போல் திமுகவும் தனித்து 234 தொகுதிகளில் நின்று இருந்தால், அல்லது காங்கிரஸ் கட்சிக்கு குறைவான சீட் கொடுத்திருந்தால் ஆட்சியமைத்து இருக்க வாய்ப்பு உள்ளது என்று அரசியல் நிபுணர்கள் சொல்லி வருகிறார்கள். ஏனெனில் 2016 தேர்தலில் அதிமுக மற்றும் திமுகவிற்கு இடையே வாக்கு வித்தியாசம் என்பது வெறும் ஒரு சதவீதம் மட்டுமே இருந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சதி

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சதி

எனவே இந்த முறை சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கக்கூடாது என்று குரல்கள் வலுத்து வருகின்றன. இதனால் தன்னை சுற்றி தமிழக அரசியலில் பின்னப்படும் சதி வலையை உணர்ந்த காங்கிரஸ் மேலிடம் உஷார் ஆகி உள்ளது. இந்தமுறை சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீட்டில் திமுகவிடம் பேரம் பேச மாட்டோம் என்று அறிவித்துள்ளது.

குண்டு ராவ் பேட்டி

குண்டு ராவ் பேட்டி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், தமிழகத்தில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டி என ஆலோசனை நடக்கிறது. தமிழகத்தில் 100 தொகுதிகளில திமுகவுக்கு காங்கிரஸ் உதவியாக இருக்கும். தொகுதி பங்கீடு விவகாரத்தில் திமுகவுடன் தேவையற்ற பேரங்கள் இருக்காது. காங்கிரஸ் கட்சி எதார்த்தத்தை உணர்ந்து செயல்படும் என்றார்.

கடந்த முறை வென்றோம்

கடந்த முறை வென்றோம்

கட்சி வலுவாக இருக்கும் இடங்களை அடையாளம் காணும் பணியைத் தொடங்கியுள்ளது. நல்ல வேட்பாளர்களை அடையாளம் காணும் பணியை தொடங்கி உள்ளது பீகார் முடிவுகள் வேறு. தமிழகம் வேறு. பீகாரில் தோற்றவிட் இங்கே, திமுகவுடன் நாங்கள் கூட்டணியில் உள்ளோம், கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் ஒன்றாகப் போராடினோம் வெற்றி பெற்றோம்" என்றார்.

காங்கிரஸை கழட்டிவிடும்

காங்கிரஸை கழட்டிவிடும்

காங்கிரஸ் கட்சி எதார்த்தை உணர்ந்து திமுகவுடன் சட்டசபை தேர்தலில் பயணிக்க தொடங்கிவிட்டதையே தினேஷ் குண்டுராவின் பேட்டி காட்டுகிறது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழட்டி விட வைக்கவும் சில முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் குஷ்பு வெளிப்படையாகவே தனது கருத்தை வெளிப்படுத்தினார். திமுக காங்கிரஸ் கட்சியை கழட்டிவிடும் என்றார். எனினும் இதுவரை திமுக எந்த கருத்தையும் வெளிப்பபடுத்தவில்லை.

கூட்டணி கட்சிகளின் நிலை

கூட்டணி கட்சிகளின் நிலை

திமுக காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் என கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வென்றதை போல் வெல்லவேண்டும் என திமுக விரும்புகிறது. அதேநேரம் அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் அளவுக்கு வலுவான களப்பணி ஆற்றி வருகிறது. இது திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கும் தெரியும். இந்தமுறை திமுக முடிவு செய்து வழங்குவதே தொகுதிகளாக இருக்கும்,. பேரம் பேசும் நிலையில் கூட்டணி கட்சிகள் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

English summary
The Congress party will be realistic about the seats it will contest in Tamil Nadu as part of the DMK-led alliance, but doesn’t foresee any problems in the discussions, Dinesh Gundu Rao, AICC in-charge of Tamil Nadu, said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X