சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாராளம்.. 20 அரசு பள்ளி நூலகத்துக்காக ரூ.1.13 கோடி வழங்கிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மாநில மேம்பாட்டு நிதியிலிருந்து 20 கிராமங்களில் உள்ள அரசு பள்ளி நூலகங்களை புதுப்பிக்கவும், அரசு பெண்கள் பள்ளி புதிய வகுப்பறைகள் கட்டவும் இன்று ரூ.1,13,00,000 வழங்கியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம். முன்னாள் நிதி அமைச்சரான இவர் கடந்த முறை மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

இதற்கிடையே தான் தமிழகத்தில் 6 லோக்சபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதேபால் பிற மாநிலங்களிலும் எம்பிக்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.

 சென்னையில் குப்பைத்தொட்டியில் குழந்தை உடல்.. 'அடக்கம் செய்ய கூட காசு இல்லை'.. கண்ணீர் விட்ட தந்தை சென்னையில் குப்பைத்தொட்டியில் குழந்தை உடல்.. 'அடக்கம் செய்ய கூட காசு இல்லை'.. கண்ணீர் விட்ட தந்தை

காங்கிரசுக்கு ஒரு இடம் வழங்கிய திமுக

காங்கிரசுக்கு ஒரு இடம் வழங்கிய திமுக

அதன்படி தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 57 லோக்சபா எம்பிக்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாகின. அதன்படி திமுக 4 இடங்களுக்கும், அதிமுக 2 இடங்களுக்கும் போட்டியிடும் நிலை ஏற்பட்டது. ஆனால் திமுக 3 இடங்களில் மட்டும் போட்டியிட்டது. ஒரு இடத்தை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது.

தமிழகத்தில் இருந்து தேர்வு

தமிழகத்தில் இருந்து தேர்வு

காங்கிரஸ் சார்பில் ப சிதம்பரம் போட்டியிட்டார். திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஸ்குமார், இரா கிரிராஜன் களமிறங்கினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவிசண்முகம், ஆர் தர்மர் போட்டியிட்டனர். இவர்கள் அனைவரும் போட்டியின்றி ஒருமனதாக ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்டனர்.

ரூ.1.13 கோடி வழங்கல்

ரூ.1.13 கோடி வழங்கல்

இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து லோக்சபா எம்பியாக ப சிதம்பரம் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் மாநில மேம்பாட்டு நிதியிலிருந்து தனது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு இன்று ரூ1 கோடியே 13 லட்சம் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக ப சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

எதற்கெல்லாம் எவ்வளவு?

எதற்கெல்லாம் எவ்வளவு?

நாடாளுமன்ற உறுப்பினர் மாநில மேம்பாட்டு நிதியிலிருந்து இன்று ரூ.1,13,00,000 வழங்கி கடிதம் கொடுத்திருக்கிறேன். முதல் பணியாக சிவகங்கை, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 20 ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் நூலகங்களைப் புதுப்பித்து, புதிய நூல்கள், நாற்காலிகள், மேஜைகள் வாங்கி நூலகங்களை மேம்படுத்துவதற்கு ரூ 55,00,000 வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது பணியாக சிவகங்கை நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ 58,00,000 வழங்கப்பட்டுள்ளது.

English summary
Senior Congress leader P Chidambaram MP from Tamil Nadu, Rajya Sabha MP today donated Rs 1,13,00,000 from the State Development Fund to renovate government school libraries in 20 villages and build new classrooms in government girls' schools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X