சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'சோஷியல் மீடியா' புரட்சி டைம்பாஸ்.. 'ஒரு விரல் புரட்சி' செய்ய வாங்க.. குஷ்பு அழைப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தலில் ஆர்வமுடன் ஓட்டுப்போட்ட பிரபலங்கள்- வீடியோ

    சென்னை: சமூக வலைதளங்களில் குரல் எழுப்புவதால் மாற்றங்கள் வராது என்றும், ஓட்டுபோட்டால்தான் மாற்றம் வரும் என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகம் மற்றும் புதுவையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.
    தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட பட்டினம்பாக்கத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாள குஷ்பு வாக்களித்தார்.

    Congress spokesperson Khushboo request to vote in lok sabha polls

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாளைக்கு எந்த அரசாங்கம் வந்தாலும், தப்பு செஞ்சா தட்டிகேட்கிறதுக்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கும். ஆனால் உங்க விரலில் மை இல்லை என்றால் நீக்க வாக்களிக்காமல் விட்டுவிட்டால், நிச்சயமாக கேள்வி கேட்கும் எந்த உரிமையும் கிடையாது" என்றார்.

    Congress spokesperson Khushboo request to vote in lok sabha polls

    மேலும் வெறும் பேஸ்புக், சோஷியல் மீடியாவில் குரல் எழுப்புவதால் மாற்றம் வந்துவிடாது என்று கூறிய குஷ்பு, நம்ம சமுதாயத்தில் மக்களிடம் மாற்றங்கள் வர வேண்டும் என்றால் வாக்களிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

    உங்க ஓட்டா? அதை வேறு யாரோ போட்டுட்டாங்க பாஸ்.. குமரியில் பதிவானது முதல் கள்ள ஓட்டு! உங்க ஓட்டா? அதை வேறு யாரோ போட்டுட்டாங்க பாஸ்.. குமரியில் பதிவானது முதல் கள்ள ஓட்டு!

    மேலும் இந்த டுவிட்டர்கள், பேஸ்புக் மற்றும் சோஷில் மீடியாக்கள் எல்லாமே நமது பொழுதுபோக்குதான் என விமர்சித்துள்ள குஷ்பு, இவை எதுவுமே கேம் சேஞ்சர் கிடையாது என்றும் ஓட்டு போடுவது தான் கேம் சேஞ்சர் என்றும் தெரிவித்தார்.

    English summary
    Congress spokesperson Khushboo request to vote in lok sabha polls, don't waste time in social media
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X