சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரபேல் ஆவணத்தை திருடி வெளியிட்ட திருட்டு கும்பல் உபதேசம் செய்யலாமா.. தமிழிசை அட்டாக்!

Google Oneindia Tamil News

சென்னை: மோடி ஆட்சியில் மற்றொரு தன்னாட்சி அமைப்பு சீர்குலைக்கப்பட்டுள்ளதற்கு தேர்தல் ஆணையமே சாட்சி என்று குற்றம்சாட்டிய ப.சிதம்பரத்தை விமர்சித்து, தமிழக பாஜ மாநில தலைவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அன்றைய தேர்தல்ஆணையர் கோபால்சாமி அவர்களின் ஆட்சேபணையும், கருத்தையும் மீறி நவீன்சாவ்லாவை தேர்தல் ஆணையராக நியமித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவத்தின் போது அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

Congress stolen Rafael documents Can you do the doctrine? Tamilisai Soundararajan

கோபால்சாமியின் ஆட்சேபணையை மீறி, நவீன்சாவ்லா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட போது அமைதியாக இருந்து விட்டு, இன்று தேர்தல் ஆணையத்தை மோடி சிதைத்துவிட்டதாக நீங்களே சொல்வது வேடிக்கையாக உள்ளது.

மேலும் ரபேல் ஆவணத்தை திருடி வெளியிட்ட காங்கிரஸ் கும்பல் உபதேசம் செய்யலாமா என காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழிசை மேலும் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தேர்தல் ஆணையத்தை மோடி சீர்குலைத்துவிட்டார் என கூறும் சிதம்பரம் அவர்களே, 3 பேரில் 2 பேரின் கருத்து பெரும்பான்மையானது.

அதில் 3-வது நபர் வெளியில் வந்து பிரகடனப்படுத்துவதும், அதற்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதும்?.புரிகிறது அவர் யாருடைய ஏஜென்ட் என்பது?ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்? என சரமாரியாக சிதம்பரத்தை விமர்சித்துள்ளார் தமிழிசை.

மோடி மற்றும் அமித்ஷா மீதான தேர்தல் விதிமீறல் புகாரில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மத்தியில் கருத்து வேறுபாடு எழுந்தது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கருத்து தெரிவித்தார் அதிகாரிகளில் ஒருவரான அசோக் லவாசா.

ஆனால் மற்ற இரு அதிகாரிகள் அவரது பரிந்துரையை ஏற்கவில்லை. இதனால் ஏற்பட்ட சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கருத்து வேறுபாடு இயல்பானது. அனைவரும் ஒரே மாதிரி யோசிக்க முடியாது என கூறினார். தேர்தல் ஆணையத்தில் நடந்த இந்த கருத்து வேறுபாடுகளுக்கு மோடி அரசே காரணம் என எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

உங்கள் ஒவ்வொரு ஓட்டும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும்- கேதார்நாத்தில் இருந்தபடியே மோடி உருக்கம் உங்கள் ஒவ்வொரு ஓட்டும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும்- கேதார்நாத்தில் இருந்தபடியே மோடி உருக்கம்

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் இது குறித்து பிரதமரை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடியாக தற்போது ட்விட்டரில் தமிழிசை மேற்கண்ட காரசாரமான கருத்துகளை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Tamil Nadu BJP state leader has commented on Chidambaram alleging that the Election Commission is the witness for the disruption of another autonomous body in the Modi regime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X