சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவுக்கு நாங்குநேரியா? டெல்லிக்கு படையெடுக்கும் தென்மாவட்ட காங்.-ன் எதிர்ப்பு கடிதங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் வெல்லக் கூடிய நாங்குநேரி சட்டசபை தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என தென்மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் டெல்லிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

திமுக கூட்டணிக் கட்சியினரின் நன்றி அறிவிக்கும் திருச்சி கூட்டத்தில் பேசிய நடிகர் உதயநிதி, நாங்குநேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார். திமுக இதுவரை கடைபிடித்த மரபுகளுக்கு மாறானது உதயநிதியின் பேச்சு.

3 மணி நேரத்திற்கும் மேல் தாஜ் மஹாலை சுற்றி பார்த்தால் அபராதம்.. சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி 3 மணி நேரத்திற்கும் மேல் தாஜ் மஹாலை சுற்றி பார்த்தால் அபராதம்.. சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

வினையாகிப் போன உதயநிதி பேச்சு

வினையாகிப் போன உதயநிதி பேச்சு

கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாமல் ஸ்டாலின் மகன், நடிகர் என்கிற தகுதிகளை வைத்துக் கொண்டு விளையாட்டுப் பிள்ளையாக அவர் பேசியது இப்போது பெரும் வினையாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பாஜக நுழையவே முடியாத நிலையில் இருக்கிறது.

தமிழக களம் இது

தமிழக களம் இது

இங்கே மதச்சார்ப்பற்ற கட்சிகள் ஓரணியில் ஒன்று திரண்டு நிற்கின்றன. இதனால்தான் இடதுசாரிகளுக்கு 4 இடங்களைத் தமிழகம் அள்ளிக் கொடுத்திருக்கிறது. வரலாற்றில் மிக முக்கியமாக ஒரு கால கட்டத்தில் தமிழகம் இருக்கிறது.

காங்கிரஸ் எதிர்ப்பு

காங்கிரஸ் எதிர்ப்பு

இத்தகைய அடிப்படை புரிதல் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என நாங்குநேரி தொகுதியில் கை வைத்தார் உதயநிதி ஸ்டாலின். இப்பொழுது தென் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஒன்று திரண்டு திமுகவுக்கு அத்தொகுதியை தந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக நிற்கின்றனர்.

திமுகவினரும் அதிருப்தி

திமுகவினரும் அதிருப்தி

அதுவும் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒரு தொகுதியை திமுகவுக்கு கொடுப்பது என்பது கூட்டணி அதர்மம் என வசைபாடும் கடிதங்களும் டெல்லிக்கு சென்றுள்ளனவாம். அமைதியாக இருந்த கூட்டணியில் கல்லை விட்டு எறிந்துவிட்டாரே உதயநிதி என தென்மாவட்ட திமுகவினரும் வருத்தப்படுகிறார்ர்கள்.

English summary
Sothuern TamilNadu Congress leaders upset over Udhayanidhi's demand on Nanguneri Seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X