சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தலைவா.. நீங்க விலக கூடாது".. ராகுலுக்கு ஆதரவாக பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள்!

ராகுல் காந்தி பதவி விலககூடாது என்று தொண்டர்கள் தீக்குளிக்க முயன்றனர்

Google Oneindia Tamil News

சென்னை: "தலைவா.. நீங்க பதவி விலக கூடாது.. தலைவராக எப்பவுமே இருக்கணும்" என்று ராகுல்காந்திக்கு ஆதரவாக ஆவேசத்துடன் சொல்லி கொண்டே காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்றாலும் ராகுல்காந்தி தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு ரொம்பவே அப்செட்டில் உள்ளார்.

தலைவர் பதவியை ராஜினாமா செய்ய போகிறேன் என்று விரக்தியில் சொல்லவும், அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரியங்கா, முக ஸ்டாலின் போன்றோர் தொடர்ந்து ராகுலிடம் தொடர்ந்து தலைமை பொறுப்பை ஏற்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

சுழற்றி அடித்த சூறாவளி.. பொத்தென்று விழுந்த மரம்.. சிக்கிய இரட்டையர்கள்.. ஒருவர் பலி சுழற்றி அடித்த சூறாவளி.. பொத்தென்று விழுந்த மரம்.. சிக்கிய இரட்டையர்கள்.. ஒருவர் பலி

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

இந்நிலையில், சேலம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த பழனி என்பவர், சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வகித்து வருகிறார். இவர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு கையில் மண்ணெண்ணை கேனுடன் சென்றார். பின்னர் ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியபடியே மண்ணெண்ணையை தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து பதறிய பாதுகாப்பு போலீசார் பழனியை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

தாங்க முடியவில்லை

தாங்க முடியவில்லை

அப்போது பழனி சொல்லும்போது, "நாட்டின் மக்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் ராகுல் காந்திதான். அரசியல் குடும்பத்திலிருந்து வந்த ராகுல் காந்திக்கு தான் நாட்டின் வளர்ச்சி, நாட்டு மக்களின் தேவை அனைத்தும் தெரியும். அவர் பதவி விலகுவதை என்னால் தாங்க முடியவில்லை" என்றார்.

2 பேர் முயற்சி

2 பேர் முயற்சி

இதேபோல, சென்னையில் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவராக தொடர வலியுறுத்தி மாநில காங்கிரஸ் தலைவர் கே .எஸ் அழகிரி தலைமையில் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர். அப்போது 2 தொண்டர்கள் திடீரென பெட்ரோலை தலையில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்து பதறிய தொண்டர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்து இரண்டு தொண்டர்களையும் காப்பாற்றினர்.

மக்கள் மனதில் ராகுல்

மக்கள் மனதில் ராகுல்

தற்கொலையும், தீக்குளிப்பும் ஒருபோதும் ஒன்றுக்கும் தீர்வு ஆகாது என்றாலும், ராகுல் காந்தி எந்த அளவுக்கு இளைஞர்களின் மனதை பெருமளவு சுண்டி இழுத்துள்ளார் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. பழமையான கட்சியான காங்கிரசில் ராகுல்காந்தியின் இருப்பு அவசியம் என்பதைதான் இவை எடுத்து காட்டுகின்றன.

English summary
Congress Volunteers tried to attempt suicide for Ragul Gandhi in Chennai and Salem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X