சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்

Google Oneindia Tamil News

சென்னை: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய காங்கிரஸ் கோரிக்கைவிடுத்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக முதல்வர், பிரதமர் ஆகியோரின் டிவிட்டர் அக்கவுண்ட்டை டேக் செய்து, ட்வீட் வெளியிட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.

Congress wants NTK chief Seemans arrest over Rajiv Gandhi and LTTE remark

தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்ட ட்வீட்டுகளில் கூறியிருப்பதை பாருங்கள்:

இலங்கை தமிழர்களின் நாற்பது ஆண்டுகால இன்னல்களை துடைக்க ஒப்பந்தம் கண்டவர்#ராஜீவ்காந்தி. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, தமிழுக்கு ஆட்சிமொழி தகுதி, வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கபட்டு தமிழர் தாயகபகுதி, வரதராஜ பெருமாள் தலைமையில் தமிழர் ஆட்சி என பல்வேறு உரிமைகளை பெற்று தந்தவர் ராஜீவ்காந்தி. இலங்கை தமிழர்களை பாதுகாக்க இந்திய அமைதி காக்கும் படையை அனுப்பியவர் ராஜிவ்காந்தி. இலங்கை தமிழர்களுக்கு பாதுக்காப்பு வழங்கிய இந்திய அமைதி காக்கும் படையை சேர்ந்த 2000 இந்திய வீரர்களை இலங்கை மண்ணில் கோழைத்தனமாக கொன்று குவித்தவர்கள்.

ராஜிவ்காந்தி படுகொலையை நியாயப்படுத்தி, வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமானை தேசத்துரோக குற்றத்தின் அடிப்படையில் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் கட்சி ட்வீட் செய்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பிரச்சார கூட்டத்தில் பேசிய சீமான், ராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தியது போல வெளியான வீடியோக்கள் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி இதுபோன்ற ட்வீட்டை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

English summary
Congress has called for the arrest of the NTK Coordinator Seeman. In this regard, the Twitter account of the Chief Minister and Prime Minister of Tamil Nadu tagged and posted a tweet by Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X