சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொங்கு மண்டலத்தில் "மாஸ்" ராகுல்.. அதிக சீட் கேட்டு அட்டாக் பண்ணுமா காங்.. செம பிளான்!

Google Oneindia Tamil News

சென்னை: கொங்கு மண்டலத்தில் ராகுல் காந்திக்கு கூடும் கூட்டத்தை பார்த்து சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது போல் மாஸ் காட்டுவதே அதிக சீட்டுகளை பெறுவதற்காகத்தான் என்ற ஒரு பேச்சும் இருந்து வருகிறது.

தமிழகத்தில் வரும் மே மாதத்திற்கு சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் பம்பரம் போல் சுழன்று வருகின்றன.

ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை பார்க்க கட்சிகள் ஆவலாக உள்ளன. அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சிக்கு இருக்கும் வலிமையை கூட்டணி கட்சிக்கு காட்டி அதிக சீட்டுகளை பெற முயற்சித்து வருகின்றன.

சரிவு

சரிவு

அந்த வகையில் தேசிய கட்சியான காங்கிரஸ் தனது செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது காங்கிரஸ் வடமாநிலங்களில் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை

இதனால் இந்த முறை சட்டசபை தேர்தலில் ஒற்றை இலக்கமோ அல்லது 20 தொகுதிகளுக்குள்ளோ காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்தால் ஒஸ்தி என தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு இடம் கொடுக்காத வகையில் அதிக சீட்டுகளை பெற காங்கிரஸ் முடிவு செய்து ராகுலை தமிழகத்திற்கு வரவழைத்துள்ளது. முதலில் மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட பொங்கல் பண்டிகையின் போது வந்திருந்தார்.

ராகுல்

ராகுல்

இதைத் தொடர்ந்து தற்போது கொங்கு மண்டலத்தில் கடந்த 3 நாட்களாக ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அலை அலையாக திரண்டு வருகிறார்கள். தேசிய கட்சியின் பிரதிநிதி என்றாலும் மிகவும் எளிமையாக அனைத்து தரப்பு மக்களுடனும் ராகுல் அன்பாக பழகி வருகிறார்.

மாட்டு வண்டி

மாட்டு வண்டி

வேனில் சர்வ சாதாரணமாக அமர்ந்து வருதல், மாட்டு வண்டி பயணம், ஏழை எளிய மக்களுடன் உணவருந்துதல், தறி நெய்தல், தமிழ் மொழி குறித்து பேசுதல் என செமையாக மாஸ் காட்டி வருகிறார். தமிழகத்தில் மிக முக்கிய தொழிலான நெசவாளர்களை அவர் சந்தித்து குறைகளை கேட்டு விட்டார். தமிழகத்திற்கு ராகுலை வரவழைத்தது வெறும் பிரச்சாரத்திற்காக மட்டும் இல்லை என்கிறார்கள்.

ராகுல்

ராகுல்

தமிழ் மொழியே தெரியாவிட்டாலும் ராகுலுக்கு போகும் இடங்களில் எல்லாம் கிடைக்கும் செல்வாக்கை கண்டு அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ராகுலை போல் முதல்வரும் கொங்கு மண்டலத்தில்தான் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் ராகுலை போன்ற தங்களுக்கு கூட்டம் இல்லை என அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ராகுல்

ராகுல்

அது போல் ராகுலுக்கு கூடும் கூட்டத்தை பார்த்து திமுகவும் வாயடைத்து போயுள்ளதாகவே கூறப்படுகிறது. இதை இதைத்தான் எதிர்பார்த்தோம் என்பது காங்கிரஸின் மைன்ட் வாய்ஸாக இருக்கிறது. இதை வைத்தே இந்த முறை தேர்தலில் அதிக சீட்டுகளை ஒதுக்க கோரி காங்கிரஸ் திமுகவிடம் கேட்கலாம் என தெரிகிறது. எதுவாக இருந்தாலும் ஏப்ரல் மாதத்தில் தெரியவரும்.

English summary
Congress will demand more number of seats by showing Rahul's mass.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X