சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான நிலைப்பாட்டை சுதர்சன நாச்சியப்பன் ஓவர் நைட்டில் மாற்ற என்ன காரணம்!

கார்த்தி சிதம்பரத்துக்கு சுதர்சன நாச்சியப்பன் திடீரென ஆதரவு அளிக்க என்ன காரணம்?

Google Oneindia Tamil News

சென்னை: கார்த்தி சிதம்பரத்தை தோற்கடித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி கொண்டிருந்த சுதர்சன நாச்சியப்பன், ஓவர்நைட்டில் "ஆதரவு" என்று பிளேட்டை மாற்றி போட என்ன காரணம்? அதன் பின்னணிதான் என்ன?

எல்லா கட்சியையும் கூட்டணியில் நுழைந்து, 10 சீட்டை வாங்கி கொண்ட கட்சி காங்கிரஸ்தான். ஆனால் வேட்பாளரை கடைசியாக அறிவித்ததும் இதே கட்சிதான். அதிலும் சிவகங்கையை நிறுத்திவிட்டு மீதி உள்ள தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது. இதற்கு காரணம், சிவகங்கையில் உட்கட்சி பூசல், சுதர்சன நாச்சியப்பன் போர்க்கொடி என்றெல்லாம் தகவல்கள் வெளியாயின.

ஆனால் இதற்கு பிறகு உடனடியாக வேட்பாளர் அறிவிப்பு, சுதர்சன நாச்சியப்பன் ஆதரவு என டக் டக்கென அடுத்தடுத்த நிகழ்வுகள் காங்கிரசில் நடைபெற்றன. இதற்கு என்னதான் பின்னணி என்று விசாரித்தபோது சில உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

6 மாத பிளான்.. ரகுராம் ராஜன் ஆலோசனை வழங்கினார்.. குறைந்த பட்ச ஊதியம் குறித்து ராகுல் விளக்கம்! 6 மாத பிளான்.. ரகுராம் ராஜன் ஆலோசனை வழங்கினார்.. குறைந்த பட்ச ஊதியம் குறித்து ராகுல் விளக்கம்!

 கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

அதாவது, கட்சியில் பதவியில் இருப்பவர்களின் வாரிசுகளுக்கு சீட் தரக்கூடாது என்பது ராகுலின் கொள்கை முடிவாக இருக்கிறது. அதனால்தான் ப.சிதம்பரம் மகன், கமல்நாத் மகன் சீட் கேட்டும் இல்லை என சொல்லப்பட்டதாம். இதுபோக, சிதம்பரம் குடும்பத்தின் மீதான ஊழல் புகாரும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

 சுதர்சன நாச்சியப்பன்

சுதர்சன நாச்சியப்பன்

ஆனால் சிவகங்கையில் பிரச்சனை வெடிக்கவும், சுதர்சன நாச்சியப்பன், ப.சிதம்பரம் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் சென்று வேட்பாளர் தேர்வு குழுவில் உள்ள முக்கியமானவர்கள் அதாவது குலாம்நபி ஆசாத், முகுல்வாஸ்னிக், அகமது படேல், ஏ.கே.அந்தோணியை தனித்தனியாக சென்று சந்தித்து பேசியிருக்கிறார்கள். சிதம்பரம் தன் மகனுக்கு சீட் கேட்க, சுதர்சன நாச்சியப்பனோ அதற்கு போர்க்கொடி உயர்த்த.. இப்படி தங்கள் தரப்பு வாதங்களையும் அங்கு எடுத்து வைத்திருக்கிறார்கள்.

யாருக்கு அரியணை?முடிவு செய்யுமா தமிழ்நாடு.. பரபர கருத்து கணிப்பு

 கைவிரித்தனர்

கைவிரித்தனர்

இருதரப்பு பேச்சையும் கேட்ட குழுவினரோ எந்த முடிவை எடுப்பதென தெரியாமல் குழம்பி விட்டார்களாம். கடைசியில் விஷயம் கைமீறி போய்விட்டதை அறிந்த முக்கிய தலைவர்களோ, தங்களால் எதுவுமே செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டதுடன், போய் தலைமையை சந்திக்கும்படியும் சொல்லி விலகி கொண்டார்களாம்.

 நெருக்கடி சமயங்கள்

நெருக்கடி சமயங்கள்

இதற்கு பிறகுதான் ப.சிதம்பரம் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசியிருக்கிறார். "காங்கிரஸ் ஆட்சியின்போது, கட்சிக்காக பல நெருக்கடி சமயங்களிலும் பல்வேறு காலகட்டங்களிலும் தான் எப்படியெல்லாம் செயல்திட்டங்களை தீட்டினேன், எவ்வளவு முடிவுகளை எடுத்தேன் என்றும் விளக்கி சொன்னாராம்.

 மகனுக்கு என்ன வழி?

மகனுக்கு என்ன வழி?

அன்றைக்கு தான் எடுத்த முடிவுகளால்தான் இன்றைக்கும் மோடி தன்னையும், தன் குடும்பத்தையும் பழிவாங்கி கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் தலைமைக்கு அடுத்தபடியாக தன்னைதான் மோடி அரசு குறி வைப்பதாகவும் விலாவரியாக எடுத்து சொல்லி மகனுக்கு ஒரு வழியை காட்ட சொல்லி கேட்டிருக்கிறார். இதையடுத்துதான் விஷயம் ராகுல், சோனியாவிடம் சென்றிருக்கிறது.

 பகிரங்க ஆதரவு

பகிரங்க ஆதரவு

தமிழக காங்கிரஸ் தலைமையை அழைத்து கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் தருவது குறித்து ராகுல் கருத்து கேட்டாராம். தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவதாக மாநில தலைமையும் பதில் சொல்லி உள்ளது. இதற்கு பிறகு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த சுதர்சன நாச்சியப்பனை அழைத்து சமாதானம் பேசி உள்ளனர். ராஜ்ய சபா சீட் தருவதாகவும் அவருக்கு உறுதி தந்தார்களாம். இறுதி விளைவு... கார்த்திக்கு ஆதரவு தருவதாக பகிரங்கமாக சொன்னாராம் நாச்சியப்பன்!

English summary
Sudharsana Naachiyappan has suddenly supported Karthi Chidambaram who is contesting in Sivagangai Constitution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X