சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று தொகுதிப் பங்கீடு உறுதியாகிறது?… தோழமைக் கட்சிகளுக்கு திமுக அழைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்த தோழமைக் கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

constituency alottment: DMK calls Alliance parties

மேலும், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி உட்பட காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மதிமுகவுக்கு மூன்று இடங்களும் விசிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும் வழங்க உள்ளதாக தெரிகிறது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு முடிந்துள்ளதால் அந்த கட்சியின் பிரச்சார வேலைகளை தொடங்கிவிட்டன. அதன்படி வருகிற 6ம் தேதி வண்டலூரில் நடைபெற உள்ள பிரம்மாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

அதேபோல் திமுக கூட்டணியும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. அந்த வகையில், வருகிற 13ம் தேதி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார்... இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேகுடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார்... இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

English summary
Today constituency alottment: DMK calls Alliance parties
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X