சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொடர் விடுமுறை எதிரொலி... மூன்று நாளில் ரூ 423 கோடிக்கு மது விற்பனை

Google Oneindia Tamil News

சென்னை: நாளை மறுநாள் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மது கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலையில் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ. 215 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. தமிழகத்தில் வழக்கமாக ஒரு லட்சத்துக்கு மது விற்பனையாகும் கடைகளில் கூட ரூ. 3 லட்சத்துக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினரே அதிகம் மதுபானங்களை வாங்கிச் செல்வதாக தெரிகிறது. மயிலாப்பூரில் நேற்று நள்ளிரவு வரை மதுபானம் விற்ற டாஸ்மாக் கடைக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

எம்ஜிஆர் பைட் பாத்திருப்பீங்க.. ஏன் ஜாக்கி சான் கூட பாத்திருப்பீங்க.. இந்த சண்டையை பாருங்க மக்களே! எம்ஜிஆர் பைட் பாத்திருப்பீங்க.. ஏன் ஜாக்கி சான் கூட பாத்திருப்பீங்க.. இந்த சண்டையை பாருங்க மக்களே!

டாஸ்மாக் கடைக்கு சீல்

டாஸ்மாக் கடைக்கு சீல்

வரும் 18 ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, சென்னை மயிலாப்பூரில் நேற்று நள்ளிரவு வரை மதுபானம் விற்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தியதில் மதுவிற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

அதிரடி சோதனை

அதிரடி சோதனை

மயிலாப்பூரில் உள்ள பல்லக்குமாநகரில் டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது போல், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காமல் ஓய்ந்துள்ளது. அதே போல், தேர்தலையும் அமைதியான நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

3 நாள் தொடர் விடுமுறை

3 நாள் தொடர் விடுமுறை

தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த 3 நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைககளில் ரூ.423 கோடிக்கு மது விற்பனை நடத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பரப்புரை ஓய்ந்ததை அடுத்து, கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட வெளி ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

144 தடை உத்தரவு

144 தடை உத்தரவு

அதே போல், மக்களவை தேர்தலையொட்டி புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் தேர்தல் நடத்தும் அதிகாரி அருண். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற இன்று மாலை 6 மணி முதல் ஏப்.19 காலை 9 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Sale of alcohol for Rs. 423 crores in three days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X