சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தற்காலிக ஆசிரியர்களுக்கும்.. ஏகப்பட்ட கெடுபிடிகள்.. அரசு கிடுக்கிப்பிடி

Google Oneindia Tamil News

Recommended Video

    Jactto-Geo Protest: ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்- வீடியோ

    சென்னை: ஜாக்டோ- ஜியோ போராட்டம் எதிரொலியை அடுத்து, அரசால் நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள் அந்தந்த பணியிடத்திற்குரிய கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Control over temporary teachers Department of School Education Sudden report

    முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள் அந்தந்த பணியிடத்திற்குரிய கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். பள்ளி அருகாமையில் உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கலாம். மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களைப் பணியமர்த்த முன்னுரிமை வழங்க வேண்டும்.

    பள்ளிகளுக்கு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பணியமர்த்தும் ஆணைகளை முதன்மைக்கல்வி அலுவலர் இசைவுடன் வழங்க வேண்டும். பணியமர்த்தும் ஆணையில் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் ஒரு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படும். என்ற விவரம் குறிப்பிட வேண்டும்.

    மேலும் இதனைக் கொண்டு அரசின் வேலைவாய்ப்பிற்கு எத்தகைய உரிமையும், முன்னுரிமையும் கோர முடியாது. என்ற விவரம் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    School Education Department has issued a sudden control over temporary teachers
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X