சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்னும் முழுசா நண்பர்கள் ஆகலையாம்.. உள்ளுக்குள் புகையும் அதிமுக பாமக பகை.. இதென்ன கலாட்டா?

பாமகவின் பழைய விவகாரங்களை அதிமுக இன்னமும் மறக்கவில்லை என தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாமக மீது அதிமுக-வுக்கு இன்னுமும் கூட கோபம் போகவில்லை போல...வீடியோ

    சென்னை: நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் ஒன்னு இருக்கு.. என்ன தெரியுமா? பாமக மீது அதிமுக இன்னமும் கோபத்தில்தான் உள்ளதாம்.. பழைய விஷயங்களை மறக்காமல் இன்னும் சில முக்கிய புள்ளிகள் செம காண்டில் இருக்கிறார்களாம்! இதற்கு ஒரு உதாரணமும் நடந்திருக்கிறது!

    தருமபுரியின் தற்போதைய சிட்டிங் எம்பி அன்புமணி ராமதாஸ். 2014 தேர்தலில் போட்டியிட்டபோது, தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டம் கொண்டு வருவேன் என்று தொகுதி மக்களிடம் அன்புமணி ராமதாஸ் வாக்குறுதி தந்திருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, சதானந்த கௌடா, பியூஸ் கோயல் ஆகிய 3 பேரையும்18 முறை அன்புமணி ராமதாஸ் சந்தித்திருக்கிறார்.

    இப்போது மொரப்பூர் ரயில்பாதை திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வந்திருந்தார். தமிழக அமைச்சர்கள் சார்பில் தங்கமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

    ஜெ. மரணத்தால் அதிமுகவுக்கு பெரும் சரிவு... தேர்தல் முடிவுகளில் தெரியும்.. குண்டு போடும் இந்தியா டிவி ஜெ. மரணத்தால் அதிமுகவுக்கு பெரும் சரிவு... தேர்தல் முடிவுகளில் தெரியும்.. குண்டு போடும் இந்தியா டிவி

    கே பி அன்பழகன்

    கே பி அன்பழகன்

    அந்த சமயத்தில் ஆளுயர மாலை ஒன்றை பியூஷ்கோயலுடன் சேர்த்து அமைச்சர்களுக்கும் சேர்த்து அன்புமணி அணிவிக்க வந்தார். அப்போது தங்கமணி, பியூஷ்கோயலுக்கு மட்டுமே மாலைக்குள் இருந்தனர். கேபி.அன்பழகனுக்கும் சேர்த்து அந்த மாலையை போட முடியாமல் விட்டது.

    பியூஷ்கோயல்

    பியூஷ்கோயல்

    இதனைதொடர்ந்து அறிவிப்பு பலகை திறக்கப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான பட்டனை அமைச்சர்கள் ஒன்றாக அழுத்துகிறார்கள். அந்த சமயத்தில் கேபி அன்பழகன் ஒதுங்கி நிற்க முயற்சிக்கிறார். இதனால் அவரது கையை பிடித்து அன்புமணி இழுத்து பியூஷ் கோயல் பக்கத்தில் நிற்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் கேபி அன்பழகன் அதை நிராகரித்தார். இதை அங்கிருந்த அதிமுக, பாமக தொண்டர்கள் எல்லாருமே பார்த்து அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தார்கள்.

    ஊழல் பட்டியல்

    ஊழல் பட்டியல்

    இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? அதிமுக அரசு மீது 18 வகையான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, 200 பக்க புத்தகத்தை பட்டியலாக ரோசய்யாவிடம் பாமக தந்தது அல்லவா? அதில் இருந்த முக்கியமானவர்களில் ஒருவர் கேபி அன்பழகனும்கூட!

    புகைச்சல்

    புகைச்சல்

    அதனால்தான் பழைய பகையை இன்னும் அதிமுக தரப்பில் முக்கிய புள்ளிய மறக்காமல், மறக்க முடியாமல் இருக்கிறார்களாம். கூட்டணி அறிவித்து நிலைமை சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படி புகைச்சல் இன்னமும் இருக்கிறதே, தொகுதிகளில் வேலை நடக்கும்? இதனால் தொண்டர்களின் மன நிலைமை என்னாகும் என்றெல்லாம் புதுசாக குழப்பமாக ஆரம்பித்துள்ளதாம்!

    English summary
    It is said that ADMK still remembers the old events of PMK's activities. It is said that it will affect the prospect of winning the election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X