சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீமானின் அம்மா தமிழச்சியா? சுப.வீ. அறிவாலயத்தின்...பிரெஸ்ட்டிடியூட்ஸ்- ஹெச். ராஜாவின் சர்ச்சை பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் சுப.வீரபாண்டியன் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா தெரிவித்திருக்கும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Recommended Video

    Who is Seeman.. சீமான் தமிழரா ? சீமான் அம்மா தமிழச்சியா?.. எச்.ராஜாவின் சுளீர் பேச்சு!

    ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படம், ஹெச்.ராஜா, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோருக்கு நேற்று திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஹெச்.ராஜா கூறியதாவது:

    இந்த படத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களின் காதல், செயற்கை கருத்தரிப்பு மையங்கள், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இப்படம் கிறிஸ்தவர்களை பெருமைப்படுத்தி இருக்கிறது. கிறிஸ்தவர்களை இழிவுபடுத்தவில்லை.

    நீட் தேர்வால் மாணவர் தற்கொலை- வருத்தம் தெரிவித்த கையோடு காதல் தோல்வி மரணங்களுடன் ஒப்பிட்ட ஹெச்.ராஜா! நீட் தேர்வால் மாணவர் தற்கொலை- வருத்தம் தெரிவித்த கையோடு காதல் தோல்வி மரணங்களுடன் ஒப்பிட்ட ஹெச்.ராஜா!

    பத்திரிகையாளர்கள் மீது பாய்ச்சல்

    பத்திரிகையாளர்கள் மீது பாய்ச்சல்

    உங்க எல்லாருக்கும் தமிழ் முழுசா தெரியுமா? தமிழ் தெரியுமாங்கிறேன் நான்.. தமிழ் மொழி வாழ்கன்னு யார் யாரெல்லாம் சொல்றாங்களோ அவர்களுக்கு தமிழின் சிறப்பு தெரியுமா? இந்துவும் தமிழரும் வெவ்வேறுன்னு சொன்னது யாரு? இந்து இல்லைன்னா தமிழ் எங்கய்யா வந்தது? என்ன பேசுறீங்க எல்லாரும்? யூ ஆல் மீடியா பீப்பிள் பிரெஸ்ட்டிடியூட்ஸ். தமிழ் வேற இந்து வேறன்னு பேசக்கூடிய அளவுக்கு நீங்க வேணும்னே மத மாற்றத்துக்கு துணை போக வேண்டாம்னு உங்களை கேட்டுக்கிறேன்.

    சீமான் அம்மா தமிழச்சியா?

    சீமான் அம்மா தமிழச்சியா?

    who is seeman? சீமானின் அம்மா முதலில் தமிழச்சியா? சொல்லுங்க சார்.. அந்தம்மா தமிழா? இல்லை. she is a மலையாளி.. அப்புறம் என்ன பேசுறீங்க? என்னை பீகாரிங்கிறான் ஒரு முட்டாள்... நான் பச்ச தஞ்சாவூரான்...அதனால இந்த தமிழ் இந்து எல்லாம் தயவு பண்ணி பேசாதீங்க... ஊடகத்துல இன்னையோட இதெல்லாம் கட்...

    சுப.வீ அறிவாலயத்தின்...

    சுப.வீ அறிவாலயத்தின்...

    எந்த பய ஆரியர் பத்தி சொன்னது? சுப.வீரபாண்டியன் மூளை டஸ்ட்பின்னா போச்சுன்னா ஆரியர் படையெடுப்பா? ஆரியன் எங்க வந்தான்? என்ன ஆதாரம் இருக்கு? யாராவது ஒருத்தர் சொல்லுங்க பார்ப்போம்.. அதனால don't spread lies.. அதற்கு துணை போகாதீங்க..சுப.வீரபாண்டியனே அறிவாலயத்தில வாசலில் உட்கார்ந்திருக்கிற பிச்சைக்காரன். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் என்னிக்கு மோதல்? கால்டுவெல் வந்த பிறகு பொய்யை பரப்புகிறார்கள்..ஆரியர்கள் படையெடுப்பு என்கிற கட்டுக்கதைக்கு சரியான இடம் குப்பைத் தொட்டி. இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.

    சுப.வீ. பதில்

    சுப.வீ. பதில்

    ஹெச்.ராஜாவின் இந்த பேட்டிக்கு பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் இது தொடர்பாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடந்த 12 ஆம் தேதி சென்னையில் நடைபெறற ஒரு கருத்தரங்கில், நான் மதிக்கும் தோழர் மணியரசன், எனக்கு "அறிவாலயத்தின் ஒட்டுத்திண்ணைக் குடியிருப்பாளர்" என்று ஓர் இலவசப் பட்டம் வழங்கினார். நேற்று ஹெச்.ராஜா, இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு நேர்காணலில், "சுப. வீரபாண்டியன், அறிவாலயத்தில் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரன்" என்று கூறியுள்ளார். எடுப்பு மணியரசனுடையது, தொடுப்பு ஹெச். ராஜாவினுடையது! என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதோடு அல்லாமல், திராவிடம் என்னும் சொல்லைத் தாக்குவதிலும், தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து வந்த மொழியன்று, தனித்தியங்கவல்லது என்று கூறிய கால்டுவெல்லை மிகக் கடுமையாக இழிவுபடுத்துவதிலும் இருவருக்கும் இடையில் ஒரு போட்டியே நடக்கிறது என்று கூறலாம். என் மீது இவர்களுக்கு ஏன் இத்தனை கோபம்? ஹெச். ராஜா என் மீது கோபப்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. நான் பார்ப்பனியத்தைக் கடுமையாகச் சாடுகிறேன்.

    எதற்காக விமர்சனம்?

    எதற்காக விமர்சனம்?

    சாதி ஒழிப்பை, பாலினச் சமத்துவத்தைப் பெரியார் வழிநின்று ஆதரிக்கிறேன். எனவே அவர் என்மீது சினம் கொள்வது இயற்கையானதே! ஆனால் தோழர் மணியரசன் என்னைத் தனிப்பட்ட முறையில் ஏன் தாக்க வேண்டும்? எங்கள் இயக்கத்தை 'கருவாட்டுச் சாம்பார்' என்று ஏன் நகையாட வேண்டும்? நான் அவரை, அவரது நீண்ட அரசியல் அனுபவத்தை, பரந்துபட்ட அவரின் படிப்பை என்றும் மதிக்கிறவன். என் அரசியல் முன்னோடிகளில் அவரும் ஒருவர் என்று பலமுறை பதிவு செய்துள்ளவன். இப்படித் தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், தமிழ்த் தேசியக் கொள்கையை, தமிழ் இன, மொழி உணர்வைப் போற்றி வரவேற்கின்றவன். உண்மையைச் சொன்னால், திராவிடக் கருத்தியலை முன்னெடுக்கும் நாங்களும், தமிழ்த் தேசியர்களும் நட்பு சக்தியாக நின்று பார்ப்பனியத்தை, சாதிய, பாலின ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள். ஆனால் தோழர் மணியரசன் அவர்களோ, எல்லா உரைகளிலும், எல்லா நேர்காணல்களிலும் திராவிடத்தை எதிர்ப்பதையும், ஆசிரியர் ஐயா வீரமணி அவர்களையும், என் போன்றோரையும் குறிவைத்துத் தாக்குவதையுமே தன் தலையாய பணியாகக் கொண்டுள்ளார். நாட்டில் ஆயிரம் சிக்கல்கள் உள்ளன. அவற்றைப் பற்றி ஒன்றும் பேசுவதில்லை.

    திராவிட பள்ளி மீது கோபம்?

    திராவிட பள்ளி மீது கோபம்?

    தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கூடப் போற்றும்வண்ணம் ஒரு நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது குறித்தும் பேசுவதில்லை. ஹெச். ராஜாவுக்கு இணையாக மணியரசன் என்னை ஏன் தாக்க வேண்டும் என்பது புரியவில்லை. தொடர்ந்து நடைபெறும் திராவிடப் பள்ளியும், புதிதாக இளைஞர்களைத் திராவிடக் கருத்தியல் நோக்கி அழைத்து வருவதும் காரணங்களாக இருக்குமோ? சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் திராவிடப் பள்ளியில் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஐநூற்றை நெருங்கிக் கொண்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (25.09.2021) இவ்வாண்டு திராவிடப் பள்ளியில் இணைந்தவர்களுக்கு, இணைய வழியில் அறிமுக வகுப்பு நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாழும் தமிழ் இளைஞர்கள் பலரும் இப்பள்ளியில் இணைந்துள்ளனர். எடுத்துக்காட்டிற்காகச் சில புள்ளி விவரங்களைக் கீழே தருகின்றேன். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் இணைந்திருப்பது வியப்பாக இல்லை. ஆனால் நியூசிலாந்து, ஜப்பான், ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ, சுவீடன், மெக்ஸிகோ போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் கூட இவ்வாண்டு திராவிடப் பள்ளியில் இணைந்துள்ளனர்.

    ஹெச்.ராஜா கோபத்துக்கு காரணம்?

    ஹெச்.ராஜா கோபத்துக்கு காரணம்?

    மேலும். இணைந்துள்ளவர்களில், சரிபாதிக்கும் மேலாக, அதாவது 283 பேர் இளைஞர்கள். இப்போதும் கூட, இவையெல்லாம் ஹெச். ராஜாக்களைத்தானே கோபப்படுத்த வேண்டும், தோழர் மணியரசன்களை ஏன் கோபப்படுத்துகிறது என்று புரியவில்லை! இன்னொரு காரணமும் இருக்கலாம். அய்யா மணியரசன் மொழியில் 'கருவாட்டுச் சாம்பார்' என அழைக்கப்படும் எங்கள் திராவிட இயக்கப் பேரவையில், புதிதாக ஓசூர், பாகலூர் பகுதிகளில் இருந்து 23 பேரும், அரியலூர், பெரம்பலூர், குன்னம் பகுதிகளில் இருந்து 44 பேரும் இப்போது இணைந்துள்ளனர். நேற்று முன்தினம் (26 ஆம் தேதி) நானும் தோழர்கள் சிங்கராயர், எட்வின், இக்லாஸ், ராஜ் குமார், இராவணன் ஆகியோரும் ஓசூர் சென்றிருந்தோம். இணைந்துள்ள இரண்டு பெண்கள் உள்பட 23 பேரும் 30 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள்! அடுத்தவாரம், பெரம்பலூர், அரியலூர் செல்லவிருக்கிறோம்! இப்போதும் சொல்கிறேன். திராவிடக் கருத்தியல் பரவுமானால் தமிழ் இன, மொழி உணர்வும் பரவும்! சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன எங்கும் நிலைபெறும். இவைதான் ஹெச். ராஜாவின் கோபத்திற்குக் காரணங்கள். தோழர் மணியரசனுக்குமா? போகட்டும், 1980களின் இறுதியில், நான் முதன்முதலில் சந்தித்த, பொதுவுடைமையாளர் தோழர் பெ. மணியரசன் இன்றும் என் நெஞ்சில் தனித்த இடம் பெற்றவர். எனவே இன்றையத் 'தமிழ் இந்து' மணியரசன் என்னை எவ்வளவு இழிவாகப் பேசினாலும், நான் ஒருநாளும் அவரைத் தரக்குறைவாகப் பேச மாட்டேன். இவ்வாறு சுப.வீரபாண்டியன் பதிவு செய்துள்ளார்.

    English summary
    A Controversy has Erupte over Senior BJP leader H Raja Press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X