சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முகேஷ் கொலை.. விலகாத மர்மம்.. அரசியல் புள்ளிக்கு தொடர்பா.. தீவிர விசாரணை.. மேலும் ஒருவர் சரண்!

துப்பாக்கி தந்ததில் தமிழக அரசியல் புள்ளிக்கு தொடர்பு என கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    முகேஷின் நெற்றியில் ஏன் சுட்டேன் தெரியுமா.. பரபரப்பு தகவல்கள் !

    சென்னை: மாணவர் முகேஷ் கொலை விவகாரத்தில் இன்னொரு முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரணடைந்துள்ளார். குற்றவாளி விஜய்க்கு நாட்டு துப்பாக்கியை தந்தது யார் என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரின் பெயரும் இந்த வழக்கில் அடிபடுவதாக சொல்லப்படுவதால், பரபரப்பு கட்டத்தை இந்த விசாரணை எட்டியுள்ளது.

    உதயா, விஜய் ஆகியோர் முகேஷின் நெருங்கிய நண்பர்கள்! கடந்த வாரம் விஜய்யின் வீட்டுக்கு உதயா சென்றுள்ளார். அங்கு விஜய்யுடன் முகேஷ் ஒரு ரூமில் பேசி கொண்டு இருந்திருக்கிறார். அப்போதுதான் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    சரியாக நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு பாய, முகேஷ் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததை அடுத்து, ஆஸ்பத்திரியில் கொண்டு போய் அனுமதித்தும், பலனின்றி உயிரிழந்தார். தாழம்பூர் போலீசார் விசாரணையில் இறங்கிய நிலையில், செங்கல்பட்டு கோர்ட்டில் மறுநாளே விஜய் சரணடைந்தார்.

    தாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்!தாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்!

    ஆன்லைன் விற்பனை

    ஆன்லைன் விற்பனை

    குப்பை தொட்டியில் துப்பாக்கி கிடைத்ததாகவும், அதை எடுத்து விளையாட்டாக முகேஷின் நெற்றியில் வைத்தபோது தெரியாமல் வெடித்து விட்டதாகவும், அதனாலேயே பயந்துபோய் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் விஜய் கோர்ட்டில் நீதிபதியிடம் கூறியிருந்தார். எனினும் ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் வேலையை பார்த்து வந்த விஜய்க்கு இந்த துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதுதான் பெரும் அதிர்ச்சியை தந்தது. அது ஒரு நாட்டு துப்பாக்கி.

    ரவுடி கும்பல்

    ரவுடி கும்பல்

    அதனால் விஜய்யை போலீஸ் காவலில் எடுத்தால் உண்மை நிலவரம் தெரியவரும் என்று போலீசார் முடிவு செய்து, அதன்படி விசாரணையும் நடத்தி வருகின்றனர். தன்னுடைய ரவுடி கும்பலில் முகேஷையும் சேரும்படி விஜய் வலியுறுத்தி வந்தாராம். ஆனால், முகேஷ் இதற்கு மறுத்து உள்ளதாக தெரிகிறது. வீட்டுக்கு வந்தபோதும், ரவுடி கும்பலில் சேரும்படி வற்புறுத்தியதாகவும், ஆனால் முகேஷ் பிடிவாதமாக இருந்ததால், துப்பாக்கியால் சுட்டு விட்டதாகவும், விஜய் போலீசாரிடம் இப்போது தெரிவித்துள்ளார்.

    அரசியல் புள்ளி

    அரசியல் புள்ளி

    மேலும் கொலையாளி விஜய், பெருமாட்டுநல்லூர் செல்வம் என்ற ரவுடி கும்பலில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. உள்ளூர் அரசியல் புள்ளி ஒருவருடன் விஜய்க்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக இந்த வழக்கின் ஆரம்பத்திலேயே சலசலக்கப்பட்டது. துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பதற்கு, குப்பைத்தொட்டி என்றார், பிறகு தனது நண்பரின் வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறேன் என்றார், பிறகு கடலில் வீசிவிட்டேன், கல்குவாரியில் வீசிவிட்டேன் என விஜய் மாறி மாறி சொல்கிறார்.

    அரசியல் புள்ளி

    அரசியல் புள்ளி

    இறுதியாக நண்பரின் வீட்டு பக்கம் புதைத்து வைத்திருக்கேன் என்றார். இதையடுத்துதான், அந்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஆனாலும் இதுவரை சரியான தகவல்களை விஜய் சொல்லாமல் வருகிறார். அந்த அரசியல் புள்ளி யார், எந்த மாதிரியான தொடர்பு, துப்பாக்கியை உண்மையிலேயே தந்தது யார்? அந்த முக்கிய அரசியல் புள்ளிக்கும் முகேஷுக்கும் ஏதாவது தொடர்பா போன்ற கேள்விகளை முன்வைத்து போலீசார் துரித விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ரவுடி கும்பல் தலைவரான செல்வம் என்பவர் தேனி கோர்ட்டில் இன்று மாலை சரணடைந்துள்ளார். இதனால் முகேஷ் கொலை குறித்த பரபரப்பு தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    English summary
    controversy in mukesh murder case and culprit Vijay is said to have been involved with a political figure
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X