சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இத்தனை காடு இருக்க.. கர்நாடகா சென்றது ஏன்? மேன் vs வைல்டால் மீண்டும் சர்ச்சையில் ரஜினி

மேன் vs வைல்ட் நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகா கேரளாவை இணைக்கும் பந்திபூர் காட்டை தேர்வு செய்து இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Controversy on Man Vs Wild, featuring Rajinikanth| ரஜினி கர்நாடகா சென்றது ஏன்?

    சென்னை: மேன் vs வைல்ட் நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகா - கேரளாவை இணைக்கும் பந்திபூர் காட்டை தேர்வு செய்து இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

    பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். மேன் vs வைல்ட் நிகழ்ச்சி என்பது பியர் கிறில்ஸ் எனப்படும் முன்னாள் பிரிட்டிஷ் பாதுகாப்பு படை வீரரால் நடத்தப்படும் நிகழ்ச்சி ஆகும்.

    காடுகளுக்குள் சென்று அங்கு எப்படி வாழ்வது, எப்படி உயிர் பிழைப்பது என்பதை அவர் கற்றுத்தருவார். இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்று காலை இதற்கான படப்பிடிப்பு தொடங்கியது. பெரும்பாலும் இன்று மாலையே இதற்கான படப்பிடிப்பு முடிந்துவிடும்.

    மோடி ரெக்கார்டை முறியடிப்பாரா ரஜினி.. ஒபாமா ஸ்டைலில் களமிறங்க திட்டம்.. மேன் vs வைல்டின் பின்னணிமோடி ரெக்கார்டை முறியடிப்பாரா ரஜினி.. ஒபாமா ஸ்டைலில் களமிறங்க திட்டம்.. மேன் vs வைல்டின் பின்னணி

    எப்படி எடுக்கிறார்கள்

    எப்படி எடுக்கிறார்கள்

    சமயத்தில் நாளையும் இதற்கான படப்பிடிப்பு நடக்கும். பெரும்பாதுகாப்போடு, இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது. உரிய போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு சாதனங்கள், உணவுகள், மருத்துவ சாதனங்களுடன் இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்த படப்பிடிப்பில் ரஜினிக்கு உதவியாக அவரின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்தும் கலந்து கொண்டுள்ளார். அதேபோல் ரஜினியின் தனிப்பட்ட பாதுகாவலர்களும் அங்கு இடம்பெற்றுள்ளனர். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    எங்கு நடக்கிறது

    எங்கு நடக்கிறது

    மேன் vs வைல்ட் நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகா - கேரளாவை இணைக்கும் பந்திபூர் காடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது புலிகள் காப்பாக காடு ஆகும். இங்கே மான்கள், புலிகள், யானைகள் அதிக அளவில் காணப்படும். கர்நாடகாவின் மைசூரில் இருந்து கேரளாவின் வயநாட்டை இணைக்கும் இடைப்பட்ட வழியில் இந்த காடு இருக்கிறது. இதன் பெரும்பகுதி கர்நாடகாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    இந்த நிலையில், இங்குதான் ரஜினியின் இந்த மேன் vs வைல்ட் எபிசோட் எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இதேபோல் நிறைய காடுகள் உள்ளது. கொல்லிமலை போன்ற சாகசம் செய்ய ஏற்ற அடர்த்தியான காடுகள் உள்ளது. ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஏற்றபடியான காடுகளும் உள்ளது. ஆனால் இதை எல்லாம் விட்டு ரஜினி பந்திபூர் காட்டை தேர்வு செய்தது ஏன் என்று பெரிய அளவில் கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக டிவிட்டரில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    தமிழகம்

    தமிழகம்

    மேன் vs வைல்ட் போன்ற நிகழ்ச்சி தமிழகத்தில் எடுக்கப்பட்டால், சுற்றுலா பயணிகள் பலர் தமிழகம் வருவார்கள். தமிழகம் உலக அளவில் பிரபலம் அடையும். ஷூட்டிங் எடுக்கப்படும் இடமும் பெரிய பிரபலம் அடையும். ஆனால் அதை எல்லாம் செய்யாமல் ரஜினி ஏன், இப்படி கர்நாடகாவில் இருக்கும் பந்திப்பூர் காட்டை தேர்வு செய்துள்ளார். அவர் ஏன் தமிழக காடுகளை கண்டுகொள்ளவில்லை என்று பலரும் கேட்டுள்ளனர்.

    புலிகள் எப்படி

    புலிகள் எப்படி

    புலிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ரஜினி இப்படி செய்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் கூட, தமிழகத்தில் நிறைய புலிகள் காப்பாக காடுகள் உள்ளது. அங்கெல்லாம் ஷூட்டிங் செய்ய ஏன் ரஜினி கேட்கவில்லை. தமிழகம்தான் அவரை உலகிற்கு அடையலாம் காட்டியது, தமிழகத்தை ஏன் அவர் உலகிற்கு அடையாளம் காட்ட மறுக்கிறார் என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    கர்நாடகா எப்படி

    கர்நாடகா எப்படி

    கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் ரஜினி இப்படி செய்கிறாரா என்றும் சில இணையவாசிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் இந்த முடிவு மேன் vs வைல்ட் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் சிலர் கூறுகிறார்கள். அவர்கள்தான் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை தேர்வு செய்வார்கள். காட்டின் அடர்த்தி, பாதுகாப்பு, தன்மை, ஷூட்டிங் எடுக்க வசதி அனைத்தையும் பார்த்துவிட்டு அவர்கள்தான் நிகழ்ச்சி நடத்தப்படும் இடத்தை தேர்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

    English summary
    Controversy on Man Vs Wild, featuring Rajinikanth over the Bandipur Forest selection in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X