6ம் வகுப்பு பாடபுத்தகத்தில் ரம்மி சூதாட்டம்! சர்ச்சையில் பள்ளிக் கல்வித்துறை! பெற்றோர்கள் அதிர்ச்சி!
சென்னை : தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவத்துக்கான கணிதப் பாடப் புத்தகத்தில் ரம்மி விளையாட்டு குறித்து விவரிக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பணத்திற்கு ஆசைப்பட்டு அல்லது வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என நினைத்து அறியாமையில் மூழ்கி மன நோயாளிகளாக மாறி தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
விட்டதை பிடித்து விடலாம் என நினைத்து கடனுக்கு மேல் கடன் வாங்கி கடனில் மூழ்கி வேறு வழியின்றி தற்கொலை முடிவை தேர்வு செய்யும் அவலநிலை நீடிக்கத்தான் செய்கிறது. ஆன்லைன் ரம்மி, ட்ரேடிங்க் ஆப்கள் தான் இந்த அவலநிலைக்கு காரணம்.
ஆன்லைன் ரம்மி எனும் சிலந்தி வலை.. சிக்கியவர்கள் மீளாமல் போக என்ன காரணம்..? விளக்கம் தரும் நிபுணர்கள்

பள்ளி புத்தகத்தில் ரம்மி
இதனையடுத்து எழுந்த எதிர்ப்புகள் மற்றும் கோரிக்கைகளால் தடை கொண்டுவரப்பட்டது. ரம்மி நிறுவனங்கள் மேலமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த சட்டத்திற்கு தடைபெற்றனர். இதையடுத்து மீண்டும் தமிழகத்தில் நுழைந்தது ஆன்லைன் ரம்மி. அப்போதிருந்து இப்போது வரை பல உயிர்களை தனது கோர பசிக்கு இரையாக்கி வருகிறது என்றே கூறலாம். இதனையடுத்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

பெற்றோர் அதிர்ச்சி
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவத்துக்கான கணித தமிழ் மற்றும் ஆங்கில பாடப் புத்தகத்தில் ரம்மி விளையாடுவது எப்படி என விவரிக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முழு எண்களை விளக்கும் வகையில் இடம்பெற்றுள்ள பாடத்திட்டத்தில் சீட்டுக் கட்டுகள் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த நடவடிக்கை ரம்மி விளையாடுவது மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இருப்பது போலவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெற்றோர்கள் கோரிக்கை
ரம்மி விளையாட பணம் இல்லாததால் மூதாட்டி கொலை, ரம்மி விளையாட பணம் தராததால் சிறுவன் தற்கொலை என அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இந்த விவகாரம் பேசு பொருளாக உள்ளது. மாணவர்களுக்கு எண்கள் குறித்து தெளிவாக விளக்கவே ஆறாம் வகுப்பு கணிதம் புத்தகத்தில் இது வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் இது பள்ளி இதனை படிக்கும் மாணவர்கள் வீட்டில் படிப்பார்களா? அல்லது, மற்றவர்களுடன் சேர்ந்து விளையாட நினைப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ள கல்வி ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் இதனை நீக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு நீக்க வேண்டும்
கிராமங்களில் சீட்டுக் கட்டுகளை வைத்து விளையாடுவது தவறு என போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சூதாட்டத்தால் பணத்தையும் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. மற்ற மாநிலங்களில் வேறு பொருட்களை வைத்து உதாரணம் வைத்து பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ரம்மி விளையாட்டை வைத்து பாடத்திட்டம் எப்படி தயாரிக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் பள்ளி பாடப்புத்தகத்தில் சூதாட்டம் இடம்பெற்றிருப்பதால் அது தவறில்லை எனவும் மாணவர்கள் நினைக்கும் அபாயம் உள்ள நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் இதனை தமிழக அரசு நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.