• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா.. இருங்க யூடியூபை கேட்டுச்சொல்றேன்.. படுத்துறானுகளே!

|

சென்னை: முன்னாடி எல்லாம் சொந்தக்காரங்களுக்கு போன்ல பேசும் போது உங்க ஊர்ல என்ன விஷேசம், மழை பெய்ததா? வெயில் ஜாஸ்தியா இருக்கா என்றுதான் கேட்பார்கள். இப்போது போன் பேசும் போதே இன்னைக்கு என்ன ஸ்பெஷலா சமையல் செஞ்சீங்க. புதுசா ஏதாவது ட்ரை செய்தீங்களா.. இன்னிக்கு யூடியூப்ல என்ன பார்த்தீங்க என்று கேட்கின்றனர்.

  ஹோம்மேட் சமோசா.. கொரோனா ஸ்பெசல்.. யூடியூப் பார்த்து சமைக்கும் ஆண்கள் - வீடியோ

  கொரோனா வைரஸ் ஊரடங்கு நாட்களில் விதவிதமாக சமையல் செய்து ருசி ருசியாக சாப்பிட ஆரம்பித்து விட்டனர் மக்கள். பெண்களின் ராஜ்ஜியமாக இருந்த சமையல் அறை ஆண்களின் கைக்கு மாறி ஒருமாத காலமாகிவிட்டது. பன் பரோட்டா, பட்டர் பனீர் மசாலா, முட்டை பனியாரம், பிரியாணி வகைகளை விதம் விதமாக வீட்டு அம்மணிகளுக்கு செய்து கொடுத்து அசத்துகின்றனர் ஆண்கள். லாக்டவுன்

  நாட்களில் சிலரோட அனுபவங்களைத்தான் நாம இங்கே சொல்லப்போறோம்.

  தினசரியும் காலையில எழுந்திருச்சு குளிச்சு முடிச்சு சாமி கும்பிட்டு வேலைக்கு போற ஆண்களுக்கு வகை வகையா டிபன், சாப்பாடுன்னு செய்து கொடுத்து விட்டு 10 மணிக்கு மேல் சொந்தக்காரர்களிடமும் வாட்ஸ் அப் குரூப்பிலும் அரட்டை அடிக்கும் பெண்கள் இப்படி ஒரு மிக நீண்ட விடுமுறை காலம் வரும் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

  அலுவலகம் போகும் பெண்களுக்கும் இது நீண்ட விடுமுறைகாலம்தான் என்றாலும் அரசு வேலைக்கு போகும் பெண்கள், ஆண்களுக்கு இது ரிலாக்ஸ் ஆன காலம் யாரும் இந்த பைல் உடனே போய் ஆக வேண்டும் என்று தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்பதால் ரிலாக்ஸ் மூடிலேயே வேலை போகிறது. அதே நேரத்தில் உள்ளாட்சித்துறை, ஊடகத்துறை, சுகாதாரத்துறையில் வேலை செய்பவர்களுக்கு முந்தைய காலங்களை விட இப்போதுதான் வேலை பின்னி பெடல் எடுக்கிறது.

  கொரோனா லாக் டவுன்

  கொரோனா லாக் டவுன்

  ஜஸ்ட் ரிலாக்ஸ் என்று சொல்லக்கூட யாரும் இல்லை. ஆபிஸ் வேலையும் செய்து, கூடவே சமையல் வேலையும் மூன்று நேரம் செய்து மனதும் உடலும் ரெஸ்ட் வேண்டும் அவ்வப்போது கேட்கிறது. இதில் சமையல் தெரிந்த ஆண்கள் வீட்டில் இருந்தால் கவலையில்லை பெண்களின் பாடு ஜாலிதான். நம்ம ஊருக்கு தெரிந்ததெல்லாம் சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல்தான். இந்த காய்ச்சல் வந்தவர்கள் சில நாட்கள் ரெஸ்ட் எடுத்து விட்டு நன்றாக சமையல் செய்து சாப்பிட்டு விட்டு வழக்கம் போல அலுவலகத்திற்கு கிளம்பிவிடுவார்கள்.

  எவ்வளவு நேரம் டிவி பார்ப்பது

  எவ்வளவு நேரம் டிவி பார்ப்பது

  சீனாவின் இறக்குமதி நோயான கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே முடக்கி போட்டு விட்டது. ஒருமாதத்திற்கு மேல் எல்லோருக்கும் லீவு கொடுத்து தேசிய ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் எல்லோருமே வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இந்த விடுமுறை நாட்களில் லேட்டாக எழுந்து லேட்டாக சாப்பிட்டு எல்லா வேலையும் லேட்டாகவே செய்கின்றனர். அலுவலகத்திற்கு போகும் வங்கி பணியாளர்கள், ஊடகத்துறையினர் இதற்கு விதி விலக்கு என்றாலும் அவர்களையும் ஒருமாதிரியான சோம்பேறித்தனம் தொற்றிக்கொண்டது என்றுதான் கூற வேண்டும்.

  சமையலறை சாம்ராஜ்யம்

  சமையலறை சாம்ராஜ்யம்

  வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு நேரம்தான் டிவி மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க முடியும் எல்லா சேனல்களையும் மாற்றி மாற்றி பார்த்து ஒரு கட்டத்திற்கு மேல் போராடிக்க ஆரம்பிக்கவே, என்ன செய்வது யோசித்து புதிது புதிதாக கற்றுக்கொள்ள தொடங்கிவிட்டனர். எத்தனை நாளைக்குத்தான் சமையலறையை பெண்கள் கட்டி ஆள்வது, எங்களுக்கும் அதில் இடம் கொடுங்க நாங்களும் களம் இறங்குகிறோம் என்று வீட்டில் சும்மா இருந்த ஆண்கள் கோதாவில் இறங்க சமையல் அறை அதகளப்பட்டுக்கொண்டிருக்கிறது.

  டீ முதல் டின்னர் வரை

  டீ முதல் டின்னர் வரை

  கொரோனா வைரஸ் காலத்திற்கு முன் 2 லிட்டர் சமையல் எண்ணெய் செலவு செய்த வீடுகளில் இப்போது 6 லிட்டர் வரை சமையல் எண்ணெய் வாங்குவதாக சொல்கிறது ஒரு புள்ளி விபரம். காலையில் எழுந்து டீ போடுவதில் இருந்து காலை டிபன், மதியம் லஞ்ச், இரவு டின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு சாப்பிட செய்து கொடுப்பது வரை சமையல் அறை சாம்ராஜ்யத்தை பல வீடுகளில் இப்போது ஆண்கள் கைப்பற்றி விட்டனர். நேத்துவரை சுடுதண்ணீர் கூட வைக்க தெரியாமல் இருந்த பலரையும் இந்த லாக்டவுன் காலம் கை தேர்ந்த சமையல்காரர்களாக மாற்றி விட்டது

  என்று சொன்னால் அது மிகையில்லை.

  என்னென்ன சமையல்

  என்னென்ன சமையல்

  கணவரின் சமையல் திறமையை பார்த்து நீ இஞ்சினியர்தானே கேட்ரிங் டெக்னாலஜி படிச்ச மாதிரி சமையல் செய்யறியே என்று மனைவி கேட்கத் தொடங்கி விட்டார்கள். அந்த அளவிற்க சமையலில் பின்னி பெடல் எடுக்கிறார்கள். சமோசா, பன் பரோட்டா, பட்டர் சிக்கன், என விதம் விதமாக ருசி ருசியாக சமையல் செய்து கொடுத்து அசத்துகின்றனர் ஆண்கள். இந்த திறமையை எல்லாம் இத்தனை நாளாக எங்கே ஒளிச்சு வச்சிருந்தீங்க என்று கேட்க ஆரம்பித்து விட்டனர் பெண்கள்.

  புதுசு புதுசா கற்றுக்கொண்டோம்

  புதுசு புதுசா கற்றுக்கொண்டோம்

  கொரோனா வைரஸ் லாக் டவுன் ஆரம்பிக்கும் முன்பு வரை சமையல் அறை எங்கே இருக்கிறது என்று தெரியாத பல வீட்டு லிட்டில் பிரின்சஸ்கள் இப்போது பொறுமையாகவும் பொறுப்பாகவும் சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். சமையல் செய்வதெல்லாம் ஒரு வேலையா என்று கேட்ட பலரும் சமையலை ஒரு கலை என்று நினைத்து கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். எல்லோருக்கும் கை கொடுக்கிறது யுடுயூப் சமையல் சேனல்கள். எது எப்படியோ இதுநாள்வரை சாப்பிட மட்டுமே தெரிந்த பலரையும் சமையல்கலையில் நிபுணர்கள் ஆக்கிவிட்டது லாக்டவுன் காலம்.

  போனில் வீடியோ கான்பரன்ஸ்

  போனில் வீடியோ கான்பரன்ஸ்

  வீட்டு ஆண்கள் சமையல் செய்ய, பெண்களோ ஒன்றாக கூடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்னைக்கு உங்க வீட்ல என்ன சமையல், நீங்க புதுசா என்ன செய்தீங்க வீடியோ போடுங்க பார்க்கலாம் என்று கேட்க ஆரம்பித்து விட்டனர். அது மட்டுமல்லாது டிக் டாக்கில் கணவன் மனைவியாக சேர்ந்து வீடியோ போட்டு பிரபலமாகி வருகின்றனர். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த லாக்டவுன் நீடிக்குமோ? என்னென்ன புதுசு புதுசா கத்துக்க போறாங்களோ பார்க்கலாம்.

   
   
   
  English summary
  People are using Youtube more for cooking and other things due to the Corona lock down in Tamil Nadu.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X