சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் கட்சியினரே வாங்கிக்கொள்கிறார்கள்.. கூலிங் பீர் கிடைக்காததால் ‘குடிமகன்கள்’ கடுப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியல் பொதுக்கூட்டங்களால் டாஸ்மாக்கில் கூலிங் பீர் இல்லையாம்- வீடியோ

    சென்னை: தேர்தல் திருவிழா களைகட்டி உள்ள நிலையில், அரசியல் கட்சியினரே மொத்தமாக வாங்கிச் செல்வதால், கூலிங் பீர் கிடைக்கவில்லை என குடிமகன்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் வெயில் கொளுத்தி வரும் அதே நேரத்தில், தேர்தல் களத்திலும் பிரச்சாரம் அனல் பறக்கிறது.

    பிரச்சாரத்திற்கு செல்லும் வேட்பாளர்களுடன் எப்பொழுதும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கூடவே சென்று வருகின்றனர். பெரும்பாலான ஆண் வாக்காளர்களுக்கு, உற்சாகம் ஊட்டுவதற்காக மதுபானங்கள் பெட்டி, பெட்டியாக வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    கூலிங் பீர் இல்லை

    கூலிங் பீர் இல்லை

    அதிலும் குளிர்ச்சியான பீர் வகைகளை விரும்பி வாங்கிச் செல்வதாக தெரிகிறது. இதனால் வழக்கமாக கூலிங் பீரை எதிர்பார்க்கும் குடிமகன்கள், கூலிங் பீர் கிடைக்காமல் டென்ஷனில் உள்ளனர்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... வாக்கு வங்கி அரசியல், இந்த தேசத்தின் சாபக்கேடு! நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... வாக்கு வங்கி அரசியல், இந்த தேசத்தின் சாபக்கேடு!

    மதுபானம், பிரியாணி

    மதுபானம், பிரியாணி

    தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பெண்களுக்கு பணம், பிரியாணி தரும் நிலையில், ஆண்களுக்கு பணத்துடன், மதுபானங்களும் கொடுக்கப்படுவதாக தெரிகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

    வேட்பாளர்கள் புலம்பல்

    வேட்பாளர்கள் புலம்பல்

    சில முக்கிய கட்சிகளின் மாவட்ட, நகரச் செயலாளர்கள் பிரச்சாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு செலவழிக்க மறுப்பதால் கூட்டம் குறைவதாகவும், இதனால் தங்களது சொந்த பணத்தில், கிராமங்களில் இருந்து வாகனங்கள் மூலம் பிரச்சாரத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் சில வேட்பாளர்கள் தங்களது மனவருத்தத்தை சொல்ல முடியாமல் குமுறுவதாகவும் கூறப்படுகிறது.

    யாருக்கு அரியணை?முடிவு செய்யுமா தமிழ்நாடு.. பரபர கருத்து கணிப்பு

    குடிமகன்கள் குமுறல்

    குடிமகன்கள் குமுறல்

    தமிழக மதுபான கடைகளில் 25 சதவீதம் மட்டுமே கூலிங் பீர் கிடைப்பதாகவும், அதனையும் அட்வான்ஸாக அரசியல் கட்சியினர் வாங்கிச் சென்று விடுவதால், கூலிங் பீர் கிடைக்காமல் தனியார் மதுபான கடைகளுக்கு செல்லும் நிலை உள்ளதாக குடிமகன்கள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

    English summary
    Alcohol drinkers are getting angry because they do not get cooling beer In Tasmac
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X