சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை.. கஸ்தூரி சுளீர் கேள்வி.. "உங்களுக்குதான்" கேட்டுச்சா

Google Oneindia Tamil News

சென்னை: கஸ்தூரி ஒரு கேள்வி கேட்டுள்ளார்.. ஆனால் யாரை பார்த்து இந்த கேள்வி கேட்கிறார் என்று தெரியவில்லை.. "அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? அரசியல்வாதிகள் கொரோனாவில் கூட விளம்பரம் தேடுவதை தவிரக்க வேண்டும்" என்று ட்வீட் போட்டுள்ளார்.

சில தினங்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.. நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருவதுடன், அது சம்பந்தமான பட்டியலை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

இந்த எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக தலைவர்களின் காரசார விமர்சனங்களும், வார்த்தை தாக்குதல்களும் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.. மக்களின் நலனை முன்வைத்தே கண்டனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தாலும், ஒரு தரப்பினர் இதனை ரசிக்கவில்லை.. இந்த நேரத்திலும் அரசியல் தேவையா என்பதுதான் பலரது வேதனையாக உள்ளது.

கஸ்தூரி

கஸ்தூரி

அந்த வகையில் நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான கஸ்தூரியும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இது சம்பந்தமான 2 ட்வீட்களையும் பதிவிட்டுள்ளார். அதில், "அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? அண்டை மாநிலத்தில் - 100 முனைப்பு, 0 இறப்பு. 100% வெற்றி,0 விளம்பரம். அதிகம் பேசவில்லை @vijayanpinarayi அனைத்தும் செயலில் காட்டுகிறார். தமிழக தலைவர்கள் சுயவிளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே நமக்கு விடிவு"

சுயகட்டுப்பாடு

சுயகட்டுப்பாடு

"அரசியல்வாதிகள் கொரோனாவில் கூட விளம்பரம் தேடுவதை தவிர்க்கவேண்டும். இது ஆட்சியில் இருப்பவர்கள் , எதிர்க்கட்சியினர் அனைவருக்கும் பொருந்தும். மக்களுக்கு சுயகட்டுப்பாட்டை எடுத்து சொல்ல வேண்டும், கற்பிக்கவேண்டும், அதற்கு துணை நிற்க வேண்டும்" என்று வேண்டுகோளுடன் ட்வீட்கள் பதிவிட்டுள்ளார்.

வலியுறுத்தல்

வலியுறுத்தல்

ஆனால் ட்விட்டர்வாசிகளுக்கோ சந்தேகம் அதிகமாகிவிட்டது.. கஸ்தூரி யாரை சொல்கிறார் என்று? தினமும் செய்தியாளர்களிடம் பேசுவதும், எதிர்க்கட்சியினரை குறை சொல்வதும் ஆளும் தரப்புதான்.. அதேபோல அறிக்கை வாயிலாக மாநில அரசை கண்டித்து வலியுறுத்துவது திமுகதான்.. தினமும் ஏதாவது குறை சொல்லி அறிக்கை விட்டு கொண்டிருந்தால் ஸ்டாலினுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று நேற்றுகூட எடப்பாடியார் சொல்லி இருந்தார்.

அறிக்கைகள்

அறிக்கைகள்

அதனால்தான் கஸ்தூரி ட்வீட்டில் நிறைய பேருக்கு குழப்பம் ஏற்பட்டு, "தமிழக தலைவர்களா? இல்லை தமிழக ஆளுங்கட்சி தலைவர்களா?" என்றும் "பார்த்து மேடம் மெதுவா பதமா அறிக்கை விடுங்க... தமிழக தலைவர்களா? நீங்கள் சொல்ல வேண்டியது ஆளும் கட்சியை.. மற்ற தலைவர்களை அல்ல" என்றும் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

சரியான கருத்து

சரியான கருத்து

இதில், கஸ்தூரி யாரை சொல்லி இருந்தாலும் சரி, அல்லது பொதுவாகவே சொல்லியிருந்தாலும் சரி, யதார்த்தமும், உண்மையும் அதுதான்.. "விளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே நமக்கு விடிவு"என்பது நெத்தியடி வார்த்தை!!

English summary
coroanvirus: actress kasturi tweeted on tn politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X