சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேகமெடுக்கும் கொரோனா.. ஜூலை 15க்குள் சென்னையில் 1.5 லட்சம் பாதிப்பு.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: அக்டோபர் மாதம் கொரோனா வேகமெடுக்கும் என்றும் ஜூலை 15-க்குள் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1.5 லட்சமாக உயரும் என்றும் எம்ஜிஆர் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 31-ஆம் தேதி முதல் நேற்று வரை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 25,872 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பேருந்துகள் இயக்கம் தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெறுகிறது. இதனால் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கும் என தெரிகிறது.

மொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்மொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்

1000த்தை தாண்டியது

1000த்தை தாண்டியது

இதுகுறித்து எம்ஜிஆர் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் கூறுகையில் அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் பல மடங்கு அதிகரிக்கும். தமிழகத்தில் நாள்தோறும் 500 என்று இருந்த புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு கேஸ்கள் தற்போது மே 31-ஆம் தேதி முதல் நாள்தோறும் 1000- தாண்டிவிட்டது.

கொரோனா

கொரோனா

தற்போதைய பாதிப்பின் வேகம் தொடர்ந்து வருவதால் ஜூன் 30-ஆம் தேதி மொத்த கொரோனா பாதிப்பு 1.32 லட்சம் ஆகிவிடும். ஜூலை 15-க்குள் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு

தமிழக அரசு

அடுத்து வரும் மாதங்களில் கொரோனா உடனான தமிழக அரசின் போர் தீவிரமடைந்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை மாதத்தில் இந்தியாவில் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.

சமூக பரவல்

சமூக பரவல்

இந்த நிலையில் தமிழகத்தில் அக்டோபர் மாதத்திற்குள் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும் சென்னையில் ஜூலை மாதம் 15-க்குள் 1.5 லட்சமாகும் என கூறியுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை மருத்துவ நிபுணர்கள் கூறுவது போல் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

English summary
MGR University study says that Corona cases will be increased in June 30 by 1.32 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X