சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் 1756 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை இன்று 1,859 ஆக உயர்ந்துள்ளது..

இதேபோல் கொரோனா பாதிப்பில் இருந்து 2394 பேர் ஒரே நாளில் நேற்று மீண்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 2145 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. தற்போது 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. எனினும் நேற்றைவிட இன்று 103 பேருக்கு அதிகமாக கொரோனா பாதித்து உள்ளதால் கவலையை அதிகரித்துள்ளது.

இது என்ன புதுப்பழக்கம்.. கோவை கலெக்டருடன் வாக்குவாதம் செய்த அதிமுக எம்எல்ஏக்கள்!இது என்ன புதுப்பழக்கம்.. கோவை கலெக்டருடன் வாக்குவாதம் செய்த அதிமுக எம்எல்ஏக்கள்!

எவ்வளவு

எவ்வளவு

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1,859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது.

குறையும் எண்ணிக்கை

குறையும் எண்ணிக்கை


அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 2,145 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,00,434 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 28 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34,023 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது

சரிந்தது

தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21 ஆயிரம் என்கிற அளவில் சரிந்துள்ளது. . தமிழகத்தில் நேற்று 21,521 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த எண்ணிக்கை 21,207 ஆக சரிந்துள்ளது. ஆனாலும் கடந்த ஒரு மாதத்தில் ஒப்பிட்டால் குறைந்த அளவிலேயே ஆக்டிவ் கேஸ்கள் இன்று குறைந்துள்ளன.

எவ்வளவு

எவ்வளவு

தமிழகத்தில் சென்னை., கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கோவையில் நேற்று 179 ஆக இருந்த பாதிப்பு இன்று 188 ஆக உயர்ந்துள்ளது. ஈரோட்டில் 140 ஆக இருந்த பாதிப்பு இன்று 166 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 164 ஆக இருந்த பாதிப்பு இன்று 181 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் 113 ஆகவும், தஞ்சாவூரில் 102 ஆகவும், சேலத்தில் 95 ஆகவும் இன்றைய பாதிப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் எண்ணிக்கை 100க்கு கீழ் உள்ளளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கோவை தான் அதிகமாக உள்ளது. கோவையில் 1905 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, சேலம், திருப்பூர், தஞ்சாவூரில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் உள்ளது.

English summary
Corona cases has increased again in Tamil Nadu. In Tamil Nadu, 1756 people were affected by the corona epidemic yesterday and that number has risen to 1,859 today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X