சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று... தமிழகத்தில் குறையாத தாக்கம்..!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் 46,336 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Corona infected 5,791 people in a single day today

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் பாதிப்பு குறைந்தபாடில்லை. சென்னையில் மட்டும் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுபவர் எண்ணிக்கை 10,331 ஆகும். இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 1,280 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஏங்க கொரோனாவும் இல்ல... ஒன்னும் இல்ல.. இது உங்களுக்கு தேவையா... கே.என்.நேரு 'கலகல' பதில்..!ஏங்க கொரோனாவும் இல்ல... ஒன்னும் இல்ல.. இது உங்களுக்கு தேவையா... கே.என்.நேரு 'கலகல' பதில்..!

சென்னைக்கு அடுத்தப்படியாக கொரோனா தொற்று அதிகம் உடைய மாவட்டங்கள் என எடுத்துக்கொண்டால் கோவை, செங்கல்பட்டு, சேலம், திருப்பூர், ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்புக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 300-க்கும் குறைவானவர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனிடையே ஒவ்வொரு தனி மனிதரும் பொதுவிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் கட்டாயம் பின்பற்றுவோடு சுகாதாரம் பேணி நடந்தால் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Corona infected 5,791 people in a single day today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X